RIP MSV Sir – ஒரு புல்லாங்குழல் ஊமையானது

காலையில் தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்த முதல் தகவல். மெல்லிசை மன்னர் காலமானார். சென்ற ஒரு வருடத்தில் சில மரணங்கள் என்னை மிகவும் பாதித்தது. பாலு மகேந்திரா, கே பாலசந்தர், ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகள். இந்த ஆளுமைகள் தமிழ்நாட்டை தங்கள் துறைகளில் ஆண்ட பொழுது ஜொலித்த பொழுது நான் பிறந்திருக்கக் கூட இல்லை. ஜெயகாந்தன் அவர்கள் எழுத்துகள் எல்லாம் என் வயதை விட மூத்தவை. இந்த பல்வித்தக நாயகர்களுக்கு எல்லாம் மூத்தவர் MSV.

MSV

தமிழக அரசால் “திரை இசைச் சக்கரவர்த்தி” என விருது அளித்து பாராட்டப்பட்டவர். பல விருதுகள் பட்டங்கள் பெற்றாலும் மக்கள் என்றும் மெல்லிசை என்றால் விஸ்வநாதன் என்ற இணைப்புப் சொல்தான் MSV அவர்களின் மிகப் பெரிய வெற்றி….”மெல்லிசை மன்னர்” என்ற நீங்காப் புகழுக்குச் சொந்தக்காரர்.  “மெல்லிசை மன்னர்” என்ற பட்டத்தை அவருக்கு வழங்கியவர் சிவாஜி அவர்கள். கண்ணதாசன் மீது தீராத பாசமும் நேசமும் கொண்டவர். அவர்களது “அண்ணன் தம்பி” பாசம் உலகறிந்தது. இசையில் பாடல்களின் வார்த்தையை ஆக்கிரமிப்பு செய்த  MSV அவர்களின் நேர்த்தி பெயர்கொண்டது.

பாசமும் நேசமும் புகழும் பதவியும் மகிழ்ச்சியும் துக்கமும் நெகிழ்ச்சியும் துறவும்….எந்த மனநிலையிலும் கேட்க ஒரு பாடலேனும் கொடுத்தவர் MSV. உங்கள் அனுபவத்தில் பாதி வயது கூட இல்லாத எனக்கும் பாடல் தந்தவர் நீங்கள். உங்கள் அண்ணன் கண்ணதாசனுடன் நீங்காப் புகழ் பெற்ற நீங்கள், மீண்டும் வானுலகில் இசையாய் வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

நீ நிரந்தரமானவன் அழிவதில்லை……இந்தப் புல்லாங்குழல் ஊமையாகலாம்….ஆனால் அது தந்த இசை காற்றில் இருந்து மணம் பரப்பும்.

பெருமாள் முருகன்

பெருமாள் முருகன் உணர்ச்சிப் பூர்வமான முடிவை எடுக்க வேண்டியதாகி விட்டது….
வாக்குவாதம் வலுக்க பரபரப்பானது புத்தகக் காட்சி மைதானம் நேற்று….
இதனடிப்படையில் பபாசியின் செயற்குழு இன்று கூடுகிறது என செய்திகள்…..
மாதொருபாகன் விசயத்தில் பதிப்பகங்களின் நிலைப்பாடு பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது……
நான் இன்னும் நாவலை வாசிக்கவில்லை…. 
Waiting….fingers crossed….

ஓய்வு

சில நேரங்களில் நான்பெறவேண்டும் என நினைப்பவர்கள் ஓய்வு பெறுவதில்லை.
பல நேரங்களில் நான் ஓய்வு பெறவேண்டாம் என நினைப்பவர்கள் ஓய்வு பெற்றுவிடுகிறார்கள்.
அமைதியாக ஒரு மௌனசாட்சியாக நான் வேடிக்கை பார்கிறேன்….
This is not about ‪#‎MSD‬….

10300988_826525764079734_3724209101283883978_n

தாராள வர்த்தக ஒப்பந்தம்

அடப்பாவிங்களா…. இந்திரகாந்தி பஞ்ச உதவிக்காக கடல்ல கொட்டுற கோதுமை கேட்டு உங்ககிட்ட வந்தப்ப உங்க நிக்சன் என்ன பண்ணாருன்னு தெரியும்பா…. ரொம்ப try பண்றீங்க….

செய்தி: – நன்றி தினமலர் …”உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட, தாராள வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.இந்த ஒப்பந்தத்தில், ‘மொத்த விவசாய உற்பத்தியில், 10 சதவீதத்திற்கு மேல், எந்த நாடும் உணவு தானியங்களை, இருப்பு வைக்கக் கூடாது, விவசாய மானியமும், 10 சதவீதத்திற்கு மேல் தாண்டக் கூடாது; மேலும், மொத்த விவசாய உற்பத்தியானது, 1986 – 88ல் நிலவிய விலைகளின் அடிப்படையில், கணக்கில் கொள்ளப்பட வேண்டும்’ என்ற, விதிமுறை சேர்க்கப்பட்டது.
இந்த விதிமுறையை ஏற்றால், உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு குறைந்த விலையில், உணவு தானியங்கள் வழங்குவதும், விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதும் பாதிக்கப்படும் என, இந்திய அரசு கருதியது. தாராள வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறாததற்கு, இந்தியாவே காரணம் என, அமெரிக்கா குற்றம் சாட்டியது.”

ஜனனம்/மரணம்

ஜனனம்/மரணம் மனிதர்களைப் பற்றிய நினைவுகளை முழுமையாக மாற்றி விடுகின்றன அல்லது மறக்க நிர்பந்திக்கிறது…. வன்மமும் கோபமும் கூட நீர்த்துப் போகிறது… இது அந்த கணத்தின் நிகழ்வா அல்லது மனதின் ஓட்டமா என எண்னிக் கொண்டிருக்கிறேன்…
“இயற்கை” பேராற்றலின் இன்னும் ஒரு வடிவம் ….

இரோம் ஷர்மிளா

“சிறப்பு ராணுவ சட்டத்தை திரும்ப பெற வேண்டும். எனது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவேன். உணர்ச்சிகரமாக உள்ளதால் எனக்கு அழுகை வருகிறது. விடுதலையானது மகிழ்ச்சியளிக்கிறது. நான் செய்வது சரி என்பதை எனது போராட்டம் உணர்த்துகிறது. மக்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” – இரோம் ஷர்மிளா [நன்றி – தினமலர் ]

இரோம் ஷர்மிளா
14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த போராளிக்கு ஒரு “Salute”…. eagerly waiting for all the people involved in this moment to find a better solution along with the government….God Bless….

 

வாரிசு அரசியல் – ஒரு பார்வை

Good One….

வாரிசு அரசியல் – ஒரு பார்வை – இதில் மாறுபட்ட கோணமும் உண்டு

என்னுடைய நண்பர் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார். இந்த மன்னராட்சி இருந்த வரை ஊழல்கள் குறைவாக இருந்தது என்பது போல அவரது வாதம் இருந்தது என்று. இது எப்படி சாத்தியம் என்று நான் வியப்புடன் வினவியபோது அவர் சொன்னார்

நாம் ஒரே ஒருமுறை நல்ல குணாதிசியம் கொண்ட குடும்பத்தை கண்டுபிடித்து அவர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டால் பின்னர் அவர்கள் வாரிசுகளும் அதன்படி நேர்மையாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் பதவியைபிடிக்க அவருக்கு பொருள் தேவைப்படாது ( அத நிரந்தரம்தானே?) அதனால் அவர் அதிகம் பொருள் சேர்க்கமாட்டார் என்பதால் ஊழல் இல்லை. அதே சமயம் அவர் மற்றவர் ஊழலையும் தடுத்துவிடுவார் அல்லவா? இன்று நாம் ஜனநாயகத்தில் அதை மிகவும் பொதுமைப்படுத்தியதால் ஊழலும் பொதுவாகிவிட்டது என்றார்

அவரது கருத்தை என்னால் ஏற்க முடியாவிட்டாலும் அதில் நிறைய நடைமுறை சாத்தியங்கள் இல்லாமல் இல்லை
ஆனாலும் ஜனநாயத்தை நாம் காப்பாற்ற இந்த வாரிசுகளிடம்தான் செல்லவேண்டும்…

 

1. நேரு குடும்பம் , 2. ஜெகஜீவன் ராம் – மீரா குமாரி 3. விஜயராஜிய சிந்தியே மாதவராவ் சிந்தியே, வசுந்தரா சிந்தியா, 4. ஜெதீஸ் டைட்லர் – அவரது மகன், சச்சின் பைலட் – அவரது மகன் மூப்பனார் – ஜிகே வாசன்
பிற கட்சிகள்
2. சரண்சிங்- அஜீத் சிங், தேவிலால் – ஒம்பிரகாஸ் சௌதாலா
3. சாந்தி ப+ஷன் – பிராசந்த் பூஷன்
4. பகுகுணா – விஜய் பகுகுணா
5. லாலு பிரசாத் – ராப்ரி தேவி
6. தேவ கவுடா- குமாரசாமி தேககவுடா
7. மேனகா காந்தி – வருண் காந்தி
8. யஷ்வந்த் சின்கா – அவரது மகன்
9. பிரமோத் மஹாஜன் – அவரது மகன்
10. பிரதிபா பாட்டில் – மகன்
11. முலாயம் சிங் – அகிலேஷ் யாதவ்
12. ஜே.பி பட்நாயக் – நவீன் பட்நாயக்
13. சரத்பவார் – சுப்பிரியா சாகு
14. பால்தாக்கரே – உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே
15. ராஜசேகர ரெட்டி – ஜெகன்மோகன் ரெட்டி
16. என் டிராமாராவ் – சந்திரபாபு நாபுரந்தரேஸ்வரி, டகுபதி வெங்கடஸ்வராவ்
17. கலைஞர் – ஸ்டாலின் அழகிரி. கனிமொழி
18. துரைமுருகன் – கதிர் ஆனந்;
19. வீரபாண்டி ஆறுமுகம் – வீரபாண்டி ராஜா
20. டிஆர் பாலு – அவரது மகன்
21. பொன் முடி – அவரது மகன்
22. வீரமணி – அவரது மகன்
23. பிச்சாண்டி – அவரது மகன்
24. ராமதாஸ் -அன்பு மணி ராமதாஸ்
25. சிதம்பரம் – கார்த்திக் சிதம்பரம்

 

Thanks for the info – Vedanthadesikan Mani Lion

நோட்டோ – Election Outcome…

Yesterday’s news in “PuthiyaThalaimurai” : ஓட்டளிக்க விருப்பமில்லை ( நோட்டோ ) என சுமார் 3 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். Am seeing this a good beginning where ppl will start see/evaluate the “Candidates” irrespective of the “Parties” they belong too….does any major newspaper’s front-page or any TV debates covered/covering this exclusively in detail?…