ஆர்.கே.நகர் – வெற்றி மட்டுமல்ல, உத்வேகமும் தான்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு யாருக்கும் ஒரு வியப்பு அல்ல. சற்றே குறைவான வாக்குப்பதிவு, எதிர்பார்த்த வெற்றி, வியப்பு தராத வோட்டு வித்தியாசம்…. என எல்லாம் கணிக்கப்பட்ட அளவிலோ அல்லது சற்றே கணிக்கப் பட்ட அளவை விட அதிகமாகவோ இருந்தது.

வெற்றியை அ.தி.மு.க இவ்வாறு பார்க்கிறது:

1) முதல்வர் ஜெயலலிதா, ஆறாவது முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு
2) பதிவான ஓட்டுகளில், 88.43 சதவீதத்தை பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட அனைவரும், ‘டிபாசிட்’ இழந்தனர்
3) இடைத்தேர்தலில், அதிக ஓட்டு வித்தியாசத்தில், வெற்றி பெற்றவர் என்ற சாதனையை, முதல்வர் ஜெயலலிதா அடைந்துள்ளார்
4) தி.மு.க.,வின் ஓட்டு வங்கி ஆர்.கே.நகர் தொகுதியில் உடைக்கப் பட்டது [இடைதேர்தல் வேறு பொதுத் தேர்தல் வேறு; இந்த வாக்கு வங்கி சேகர்பாபு அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு என்பது என் கருத்து]
5) பொய்யான வழக்கு என்பதற்கு மக்கள் அளித்த தீர்ப்பு
6) இது போன்ற மாபெரும் வெற்றி அடுத்த பொதுத் தேர்தலிலும் பெறுவோம்

வெற்றியை தி.மு.க இவ்வாறு பார்க்கிறது:

1) ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன
2) தேர்தல் ஆணையம் செயல்படவே இல்லை
3) ஜனநாயகத்தை சீர்குலைக்க நடக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க, தி.மு.க., போராடும்
4) இடைத் தேர்தல் வெற்றி எப்பொழுதும் நிர்ணையிக்கப்பட்ட ஒன்றுதான்
5) அடுத்த பொதுத் தேர்தல் வேலைகளை இப்பொழுதே ஆரம்பிப்போம்

வெற்றியை காங்கிரஸ் இவ்வாறு பார்க்கிறது:

1) ……
2) ……
3) ……
4) ……
5) ….ஏதாவது சொல்லணும் ….”தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர முனைப்புடன் செயல்பட வேண்டும்”….

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட கம்யூனிஸ்ட் மகேந்திரன் அவர்களுக்கும் மற்றும் சுயட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைப் பதிவு செய்கிறேன்.

Jayalalithaa-campaign

மேல் கூறிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு, இந்த வெற்றிக்குப் பின் முதல்வர் ஜெயலலிதா இடைத்தேர்தல் அவர்களின் அறிக்கையும் மற்றும் அவர்களது செய்திப் பேட்டியின் போது அவர்களுது மகிழ்ச்சியான முகமும் என் எண்ணங்களைக் கவர்ந்தது.”2016 பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்த, இடைத்தேர்தலில், என்னை வெற்றி பெறச் செய்த, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றி.வாக்காளர்கள் என் மீது வைத்திருக்கும், நம்பிக்கைக்கு ஏற்ப, அவர்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை, நிறைவேற்றித் தர, தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என்ற உறுதியை, இந்த தருணத்தில் அளிக்கிறேன” என்பதுதான் முதல்வர் ஜெயலலிதா அறிக்கையின் சாரம்.

கட்சி சாராத எனக்கு, முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உத்வேகம் மகிழ்ச்சியைத் தருகிறது. வழக்கு சார்ந்த நிகழ்வுகள், ஆட்சியில் பல்வேறு சிக்கல்கள், வீட்டினுள் சுய முடக்கம், கட்சிப் பணிகளில் தேக்கம் என் பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு வருடம் ஜெயலலிதா அவர்களுக்கு சோதனைக் காலமாக நகர்ந்தது. ஜாமின் கிடைத்து வெளி உலகம் வந்தபோதும் மற்றும் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை ஆனாபோதும் இல்லாத மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் நேற்று தென்பட்டது. தமிழகம் மற்றும் இந்திய அரசியல் இரண்டிலும் செல்வாக்குள்ள ஜெயலலிதா அவர்களின் இந்த “comeback”, மாநிலம் நலம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் மீண்டும் ஒரு புதிய சக்தியைத் தரும் என்பது என் நிலைப்பாடு. மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புள்ள இந்தத் தருணத்தில் மாநிலம் சார்ந்த நன்மைகளை முதல்வர் பதவியில் உள்ள ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றுவார் என்பதும் என் கணிப்பு.

“வெற்றியை” தாண்டி இந்த “உத்வேகம்”, ஜெயலலிதா அவர்களுக்கு காலத்தின் தேவை. என்னுடைய இந்த மனநிலையில், மீதம் உள்ள சொற்ப மாதங்களில் பதவியில் இருந்து கொண்டு ஜெயலலிதா அவர்கள் ஆற்றப்போகும் பணிகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பல கோடித் தமிழனில் ஒருவனாய் நானும்…..

நரேந்திர மோடி Vs லலித் மோடி…வெற்றியும் தோல்வியும்

NaMo Vs LaMo

ரொம்ப எளிதான அறிமுகம்…. இந்திய கிரிக்கெட் குழுமத்தின் பாதையை T20 ரூபத்தில் மாற்றியவர். பல வெற்றிகளை வாழ்கையில் கொண்டவர். அதிகார பலத்திலும், அதிகார வர்க்கத்தின் தொடர்பிலும் தன்னை முன்கொண்டவர். வெற்றியின் குறியீடாக பல தரப்பட்ட மனிதர்களால் கொண்டாடப்பட்டவர். காலம் மாறியது.காட்சிகளும் மாறியது. அதிகாரமும் பதவியும் பறிபோயின. பல சிக்கலான வழக்குகளில் குற்றவாளியாக இணைக்கப்பட்டு, தேடப்படுபவர். வெளிநாட்டில் உயிருக்கு பாதுகாப்பு கருதி வாழ்ந்து கொண்டிருப்பவர்…. “லலித் மோடி”.

தற்போது லண்டனில் வசித்து வரும் லலித் மோடிக்கு விசா வழங்க பரிந்துரைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லலித் மோடியின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் . சிகிச்சை பெறுவதற்காக போர்ச்சுகலில் தங்கியிருக்கும் தன் மனைவியை சென்று பார்க்க அளிக்க லலித் மோடி முயன்றுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியேறுவதில் சில சிக்கல். இங்கிலாந்தில் இருந்து வெளியேற உதவுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை லலித் மோடி உதவி கேட்டுள்ளார். சுஷ்மா அவர்கள் இந்த அனுமதி சார்ந்து இங்கிலாந்து எம்.பி. கீத்து வெய்சுடன் பேசியுள்ளார். இந்த கோரிக்கையின் போது,
“லலித் மோடி இங்கிலாந்தில் இருந்து வெளியேற இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காது” எஎன்று கீத் வெய்சிடம் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. குற்றம் சாற்றப்பட்டு, தேடப்பட்டு (??) வரும் ஒருவருக்கு அமைச்சர் இவ்வாறு உதவலாமா என இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ், ஜனதா தளம், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் போன்ற பல கட்சிகளும் சுஷ்மாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன, கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டன. மிகச் சுலபமாக எதிர் கட்சிகள் கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தன. இங்கே நான் எல்லாக் கேள்விகளையும் எழுதப் போவதில்லை. முத்தாய்ப்பாக ஒரே ஒரு குறிப்பு: ““லலித் மோடியும், மோடி என்பதனால் இது நடந்து உள்ளது. எனவே இந்திய அரசு அவருக்கு உதவிசெய்து உள்ளது. நான் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன்” என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி ஒரு சிறந்த கருத்தை உதிர்த்திருக்கிறார். இதில் கூட சாதி பார்த்த நம் அரசியல்வாதிகள் புகழ் படவே இந்த பதிவுக்கு “நரேந்திர மோடி Vs லலித் மோடி” எனப் பெயரிட்டேன்.

மனிதாபிமான அடிப்படையில் செயப்பட்ட உதவி. இதில் சுஷ்மா மேல் எந்தத் தவறும் இல்லை எனக் அருண் ஜெட்லி மற்றும் ராஜ்நாத் சிங் இருவரும் அறிக்கை விட்டுள்ளனர். லலித் மோடியின் வழக்குரைஞராக சுஷ்மாவின் மகள் இருந்ததற்கும் சுஷ்மா பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் ஆகியோருடன் மோடிக்காகப் பரிந்துரைத்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நம்புவோம். யாரு செய்தது சரி, யாரு செய்தது தவறுன்னு பல குழப்பம். வழக்கம் போல் தலைப்பு செய்தி. ஆங்கில தமிழ் ஊடகங்களில் விவாதங்கள். 1-2 நாள் காங்கிரஸ் ஆட்கள் போட்டு தாக்கு தாக்குனு தாக்குறாங்க.

இந்த குழப்பம் பத்தாதுன்னு லலித் மோடி நச்சுனு ஒரு அணுகுண்டு போட்டார். தனது டுவிட்டர் பக்கத்தில், ”இந்த விவகாரம் தொடர்பாக எனது தரப்பு கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளேன். அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பை, மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், சசி தரூர், முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பார்க்க வேண்டும். சுஷ்மா ஸ்வராஜை பதவி விலகுமாறு கேட்கிறார்கள். ஆனால், அந்தச் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பலர் பதவி விலக நேரிடும்” என்று ஒரு போடு போட்டார்.

வழக்கம் போல் ஜனநாயகத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்ட இந்தியன்…..இது அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருகின்றான். நீங்க எல்லாம் எங்களையும் இந்த நாட்டையும் கொஞ்சமாவது பார்த்துப்பின்கனு நினச்சிக்கிட்டு இருக்கோம்…..என்று ஒரு பெருமூச்சுடன், கூட்டம்  அதிகம் உள்ள பேருந்தில், அன்றைய தினத்தில் புதுப்பிக்க வேண்டிய  பயண அட்டையுடன், கையில் உள்ள மதியச் சாப்பாட்டு பையை ஒருகையில் பிடித்துக்கொண்டு, கசங்கிய சட்டையுடன் வேலை பார்க்க பரபரப்பாக ஓடிக் கொண்டிருகிறான்.

இந்த நாட்டின் பொறுப்பை கையில் கொண்டிருக்கும் நரேந்திர மோடி இப்பொழுது வரை ஒன்றும் சொல்லவில்லை.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.
-திருக்குறள்

பரிமேலழகர் உரை:
அறன் இழுக்காது = தனக்கு ஓதிய அறத்தின் வழுவாது ஒழுகி;
அல்லவை நீக்கி = அறன் அல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து;
மறன் இழுக்கா மானம் உடையது அரசு = வீரத்தின் வழுவாத தாழ்வின்மையினை உடையான் அரசன்.

நீங்க ரொம்ப உத்தமமா, நீங்க பண்ணாததையா நாங்க பண்றோம்…என பூசி மொழுகாமல்…அறம் சார்த்து செயல் புரிவார்களா?…. எங்கள் நாட்டின் தேர்தெடுக்கப்பட்ட அரசனின் செயல் வினைக்காக காத்துக் கொண்டிருக்கும் இந்தியனாய் நானும்….

வந்தார் சென்றார்…அடுத்தது என்ன?

Obama leaves India

வணக்கம் கூறி விடைபெற்றார் ஒபாமா.
அரசியல் தாண்டி, அமெரிக்க அதிபர் இரண்டாவது முறையாக இந்தியா வந்ததும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளிலும், பேச்சு வார்த்தைகளிலும் பங்குபெற்றதும், நாட்டின் முக்கிய பிரமுகர்களை சந்தித்ததும் நிறைவான நிகழ்வுகள்.
ஆனால் ஒபாமா இந்தியாவில் இருந்த போதும் அவர் சென்ற பிறகும் சமூக வலைதளங்களிலும் பிற செய்தி ஊடகங்களிலும் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட செய்திகள்:

1) தன் பெயர் பொறித்த மோடியின் உடை –

மோடியின் உடை

இரண்டு தலைவர்கள் சந்திக்கும் பொழுது உடை ஒரு முக்கிய அங்கம். ஆள் பாதி ஆடை பாதி என்பது நம் பழமொழி தான். மக்கள் வரிப்பணம் வீணடிக்கப் பட்டாதா என்பது இங்கு ஒரு பயனற்ற கேள்வி. நம் நாட்டின் தலைவராக உள்ள ஒருவர் சிறப்பான உடை அணிவது அவசியம். இது ஒரு விவாதிக்க வேண்டிய நிகழ்வு அல்ல.
தயவு செய்து காந்தி சர்ச்சிலை அரை நிர்வாண பக்கிரியாக வட்டமேஜை மாநாட்டில் சந்தித்ததை மேற்கோள் கோளாதிர்கள். அன்றைய அரசியல் சூழ்நிலை வேறு, மேலும் அவர் “மகாத்மா காந்தி”.

2) மோடிக்கு விசா மறுத்த அமெரிக்காவின் முந்தய நிலை

மோடிக்கு அமெரிக்கா விசா

மோடிக்கு அமெரிக்கா விசா மறுக்கும் பொழுது அவர் ஒரு மாநில முதல்வர். மோடி அமெரிக்கா சென்ற பொழுது அவர் இந்தியாவின் பிரதமர். ஒபாமா வந்தது இந்தியப் பிரதமரை சந்திக்க, அது மோடியாக இல்லாமல் இருந்தலும் கூட நடந்திருக்கும். மோடியின் சொந்த சாதனைகளை நாட்டின் வெற்றியாக பிரகனப்படுத்துவதை மோடி கட்டயமாக விரும்பமாட்டார் என்பது என் நிலை. Obama wants Indian economy more than anything else.
இலங்கையின் முன்னால் அதிபருக்கு ஒரு மாநிலத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்த பொழுதும் கூட அவரை சிறப்பு விருந்தினராக மோடி அழைத்துப் பேசியதை நாம் ஒபமாவின் நிலையுடன் ஒப்பிட்டால் நமக்கு அரசியல் சூழ்நிலைகள் விளங்கும்.

3) “டீக்கடைக்காரரின் இன்றைய வாடிக்கையாளர் யார் பாருங்கள்”- என்ற வாசகம் கொண்ட புகைப்படம்

மோடிக்கு Vs ஒபாமா

நம் நாட்டின் பண்பாட்டை நிலை படுத்தும் செயலகக் காண்கிறேன். வலியவனிடம் நட்பு கொள்ள நாம் செய்ய வேண்டிய உக்தி. இந்த நட்பு ஒபமா அதிபராக உள்ள இறுதி 2 ஆண்டுகளில் எவ்வாறு நம் நாட்டிற்கு உதவும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

4) “Richest Que of India” – என்ற வாசகம் கொண்ட புகைப்படம்

Richest Que of India

மரியாதையை நிமித்தமான சந்திப்புகள்.
வியாபார நிகழ்வு.
வேறொன்றும் இல்லை.

மேற்கூறிய 4 செய்திகள் ஒட்டி பல துணைச் செய்திகளும் அது சார்த்த விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. ஆனால் நாம் விவாதிக்க வேண்டிய செய்திகள் வேறு.

சமிபகாலமாக மோடி அரசும் & பிஜேபி சார்ந்த துணைக் கட்சிகள் மற்றும் இயக்கங்களால்  “திசைதிருப்புதல்” நடைபெறுகின்றன என்று ஒரு வலிமையான குற்றச்சாற்று உள்ளது. “திசைதிருப்புதல்” நிகழ்வுகள் திட்டமிட்டு நடைபெறுகின்றவா என என்னக்குத் தெரியவில்லை…. ஆனால் திசைதிரும்பாமல், நம் கவனமும் செயல்களும் சிந்தனையும் இந்திய நாடு மற்றும் அது சார்ந்த நலன்கள் குறித்தே இருக்கவேண்டும் என்பது திண்ணம்….

1) 24,000 கோடி ருபாய் முதலிடு எந்தந்த துறைகளில் எந்த கால வரம்புக்குள் நிகழப்போகின்றன. இந்த முதலிட்டை இந்தியாவில் தக்க வைக்க மைய அரசு என்ன செய்யப் போகிறது?
2) பாதுகாப்பு துறையில், தளவாட விற்பனையில் அந்நிய முதலிட்டின் எதிர்கால உள்நாட்டுச் சவால்கள் என்ன…
3) இன்சூரன்ஸ் துறை அந்நிய முதலீடு நமக்கு உண்மையிலேயே உதவுமா…
4) அணுசக்தி ஒப்பந்தம் குறித்த புதிய முன்னேற்றம் என்ன… என்.எஸ்.ஜி., அமைப்பில் இந்தியாவை சேர்க்க சீனா எதிர்ப்பு நிலை குறித்து அமெரிக்க நிலைப்பாடு என்ன…
5) ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கம் தேவை என ஒபாமா கூறியதின் உண்மையான காரணம் என்ன …சீனாவை அமெரிக்க எப்படி எதிர்கொண்டு இந்திய சார்பில் நிற்கப் போகிறது…
6) ஆசியாவில் ஆதிக்கம் செய்யத் துடிக்கும் அமெரிக்க ஆதரவு மேற்கத்திய நாடுகளின் வலையில், இந்தியாவும், சீனாவும் விழக் கூடாது என்ற பெஜிங்கின் நிலைப்பாட்டின் காலநிலை எவ்வளவு…
7) பாகிஸ்தான் சார்ந்த நிலைகளும் மற்றும் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலையில் அமெரிக்காவின் நிலை என்ன…
8) ஐநா சபையில் நிரந்த உறுப்பு நாடுகள் சபையில் இந்தியாவைச் சேர்க்க ஒரு காலநிலையுடன் கொண்ட உறுதிமொழி உண்டா?
9) ஐநா சபையில் VETO பவர் கொண்டு பிற நாடுகள் இந்தியாவை பின்தள்ளும் பொழுது அமெரிக்க எதிர்காலத்தில் உதவுமா ?
10) எண்ணை நாடா ஆக்ராவா என வந்ததும்…. எண்ணை நாட்டு தலைவரை சந்திக்கச் சென்றது போல் எதிர்காலத்தில் வேறு எதுவும் நடக்கும்மா ….

நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்…
நட்புடன் கூடிய நடுநிலைமை முக்கியம்…
தொலைநோக்குப் பார்வை கொண்டு செயல்படவேண்டும் …
உள்நாட்டுச் சவால்கள் மற்றவர்களுக்கு சாதகமாகப் போய்விடக்கூடாது…

வேறொன்றும் அறியேன் பராபரமே…..

டில்லி சட்டசபை தேர்தல் – கெஜ்ரிவால் Vs கிரண்பேடி

“ஊழல் எதிர்ப்புவாதியான அன்னா ஹசாரேவுடன் இணைந்து செயல்பட்ட நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி, சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். அவர், கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.இதற்கிடையே, நேற்று டில்லியில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில், கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், டில்லி சட்டசபை தேர்தலுக்கான, கட்சியின் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.”
-செய்தி நன்றி தினமலர்

டில்லி சட்டசபை தேர்தல் - கெஜ்ரிவால் Vs கிரண்பேடி

டில்லி சட்டசபை தேர்தல், பா.ஜ., தரப்பில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ .பி.எஸ்., அதிகாரியான கிரண்பேடியை அறிவித்ததால் இந்த தேர்தல் மேலும் படு சூடு பிடித்துள்ளது. அன்னா ஹசாரேயிடம் அரசியல் பாடம் பயின்றவர்கள் கிரண்பேடி மற்றும் கெஜ்ரிவால்.

கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததில் நான் அறிய முற்பட்டது இவை:

1) பா.ஜ தொண்டர்களில் இருந்து ஒரு முதல்வர் வேட்பாளரை இனம்காண முடியவில்லை
2) கெஜ்ரிவால் போன்ற clean political image பா.ஜவுக்கு டெல்லியில் தேவைபடுகிறது
3) கெஜ்ரிவால் & கிரண்பேடி இருவரும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளை விமர்சித்து வந்தவர்கள், சந்தர்பங்களில் இந்த கட்சிகளின் உதவியினை மற்றும் அதரவு நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர் .
4) டில்லி சட்டசபை தேர்தல் – கிருஷ்ணாநகர் தொகுதியில் கெஜ்ரிவால் & கிரண்பேடி இருவரும் நேருக்கு நேர் களம் காண்கிறார்கள். இரு கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் நேராக களம் செல்வது இது முதல் முறை என எண்ணுகிறேன்.
5) “கிரண்பேடியுடன் நான் நேரடி விவாதம் நடத்த விரும்புகிறேன். இதற்கு அவர் தயாரா” – கெஜ்ரிவால்
“வரவிருக்கும் புது சட்டசபையில் நேருக்கு நேர் விவாதித்து ஆக்கப்பூர்வ பணியாற்றுவோம்” – கிரண்பேடி
ரெண்டு civil services officersசும் நிலைமையை தங்கள் வார்த்தைகளில் நன்றாகக் கையாளுகிறார்கள். [ SHE wants HIM to be part of new legislature 🙂 ]
6) மாறுபட்ட, படித்த, மக்களுக்கு பரிட்சயமான முகம் எல்லா கட்சிகளுக்கும் தேவைபடுகிறது.
7) கிரண்பேடி எதற்காக பிஜேபி யுடன் சேர்ந்தார், அன்னா ஹசாரேயிடம் ஆலோசனை பெற்றாரா, மோடி அரசின் மற்றும் பிஜேபியின் எந்த கொள்கை அவருக்கு பிடித்தது? டெல்லிக்கு என்ன என்ன திட்டங்கள் அவர் வைத்திருக்கிறார், அதை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுத்துவார், டில்லி சட்டசபை தேர்தல் நேரம் ஏன்? …million dollor questions ….
8) காங்கிரஸ் கட்சியின் சார்பில் எந்தக் கருத்தும் சொல்லப் படவில்லை…ஒருவேளை இன்னும் யோசிச்சிட்டு இருப்பாங்களோ…

டில்லி சட்டசபை தேர்தல் - கெஜ்ரிவால் Vs கிரண்பேடி

Happenings seems good for “Democracy”….still have to wait on what Delhi people things…. டில்லி சட்டசபை தேர்தல் முடிவு வரும் வரை காத்திருப்போம்

Note: 

இந்த டில்லி சட்டசபை தேர்தல்News shadowed one small but noticeable information today: 

“ஜெயந்தி நடராஜன் இலங்கை அதிபர் தேர்தலில், மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றதும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, இலங்கைக்கு போயிருக்காங்க… ஏற்கனவே, இலங்கை அமைச்சராக மைத்ரிபால சிறிசேன இருந்த போது, டில்லியில, மரியாதை நிமித்தமா, ஜெயந்தியை சந்திச்சு பேசிய அறிமுகம் இருக்கு… அதனால, இப்ப இலங்கைல இருக்காங்க…- டீ கடை பெஞ்ச் ” -செய்தி நன்றி தினமலர்