மனதைக் கொண்டு மணி மகுடம் கண்டோம்
நாம் உனக்கு…
உன் மணி மகுடம் கீழிறங்கா கனவு
கொண்டோம் சூளுரைத்து !!!
அல்லவை ஓங்கும் நேரம், உன் நினைவு
தடம் மாறும் தருணமிது …
எவரும் கொண்டாடும், “எவ்வழி” வந்தோரும்
என் பொருட்டல்ல.
“இவரே” எனக் கொண்டாடும் உண்மைப்
புகழ் நிலைத்திருக்கும் உணர்வாய் நீ…
உன் செயல் சொல்லும் செய்தி சுற்றம்
பார்க்கச் செய்திருப்பாய்…
சுற்றம் உன்நிலை கொள்ளும், உண்மையல்ல
மண்சரடு மட்டுமிங்கு !!!
தோள் சுமந்து கொண்டாடிய காலமின்னும்
பசுமையாய் நினைவென் நெஞ்சத்தில்
தோள் மீறி வளர்ந்த உன்செயல் யாவும்
பட்டமரம் உணர்வொத்த பகுதிதானின்று…
சிறு கவிதையாய் வாழ்க்கை உண்டு, புகழோடு
வாழப் பலவழியுமுண்டு
வாழ்தலே சில நேரமிங்கு வசந்தமாய்
பரிமளிப்பதுண்டு
மாற்றம் மட்டுமே நிரந்தரம், உண்மையறியா
பேதையல்ல நான் …
நல் மாற்றமிங்கு நிரந்தரமாய் நிலைக்க
பேராற்றலிடம் இறைஞ்சி நான் ….
தீ பற்றி எரியும்
நேரம்
வெப்பத்தின் வெம்மை தவிர்க்க
நிலை கொள்வோம் …
மனிதனின் மனம்
வினோதம் மட்டுமல்ல
சில வார்த்தைகளின்
விபரீதம் கூட …
உடல் விடுத்த
ஆன்மா… உன் வார்த்தை
கொள்ளும்
ஆப்பசைத்த குரங்காய் நீங்களும் !!!
வெறுக்கும் எண்ணம்
சொல்லும் வார்த்தை
உங்கள் நிலை சொல்லும்
உண்மை இன்று …
“ஆதிக்கம்” என்பது
வார்த்தை மட்டுமில்லை
உங்கள் வாழ்கை முறைதான்
வார்த்தை நீக்கும் நீங்கள்
உங்கள் வாழ்க்கை முறை
மற்றுமோர் நாள் எது …
மாயை எதிர்த்துப்
போராடும் என்போன்றோர் இனம்,
உலகை மாயை கொள்ளும்
உங்கள் போன்றோரின்
சுயநிறம் தெரியாமர்ப் போனோம் …
கபட வேடம்
சமுதாயக் கருத்தாக்கம்
கவியின் வார்த்தை
சேவையின் கனிவு
நிறைந்த பிறழ்வு
தற்குறி வாழ்க்கை
உண்மை உங்களிடம்
மீண்டும் உணர்ந்தேன்…
நிகழ்வை நினைத்து
நிதம் பிதற்றும்
மனிதன் அல்ல
நான்…
நினைவு மாற்றி
நிதம் நிலைபெறும்
நீள் வழி செல்லும்
நீரும் நான் …
என் இருத்தலே
உனக்குச் செய்தி ….
அழையாத நினைவு
அநேகம் இங்கே…
அழையாத நினைவு
ஆயிரமாயிரம் இங்கே…
உணர்வுகளும் நினைவுகளாய்
அழையாத உயிர்ப்போடு….
அழையாத நினைவு
அனைவருக்கும் உண்டு…
அந்த முகம்
இன்னும்
என் நினைவில்
அந்த அடுத்த முகமும்
இன்னும்
என் நினைவில்
முதல் முகம்
உன்னது
மறு முகம்
உன்சொல் வடிவம்
மறு முகம்
எனக்கு பரிட்சயம்
உன்சொல் வேறு
உருவம் தந்தது…
பாலினம் ஒரு
பொருட்டா
என்ற கேள்வி
உண்மைதான்…
பாலினம் பொருட்டில்லை
உந்தன் உணர்வு
நிச்சயம் உந்தும்…
வேறு கேள்வி
வேறு பதில்
வேறு அர்த்தம்
தொக்கி நிற்கும்
உன் நிலை…
நீ கடிந்து
கொள்ளும்
மறு முகத்தின்
உண்மை முகம்
சற்றே
காட்சிப் பிழையானது…
உண்மை என்று
ஒன்று உண்டா..
என்ற கேள்வியின்
நீட்சம்
மனிதர்களுள் பல
வடிவில்….
உந்தன்
நிறை நிலை
பகை உறை
கழு இடை
வார்த்தையின் விளையாட்டு….
“உண்மை”…
காட்சிப் பிழையானது….
தூற்றிய வார்த்தை
அநாதையாய்
கேட்பார் அற்று
நிற்கும் பார் …
“சொன்னது நீதானா
சொல்…”
சொற்கள் உன்னை
எதிர்காலத்தில்
கேள்வி கேட்கலாம்…
மறுமுகத்தை போற்றி
மகிழ்ந்திரு…
வார்த்தைகள் மாறலாம்
உள்நினைவு மாறுமா?…
ஆம் …
அது உனது
அழையாத நினைவு….
பேசாப் பொருள்
பேசுவோம்
என்று
பேசும்
பொருள் கொண்ட
என் நண்பனுடன்
மனம் திறந்த
உரையாடல்….
நடுநிலை என்றால்
என்ன?….
வணங்கி நின்றேன்
கேள்வியுடன்….
பல கருத்துக் கொண்ட
இந்நாட்டில்
பகடி செய்யப்படும்
மனிதரின் நிலை
அதுவென்றான்…
புரியவில்லை என்றேன்
நான் …
புன்னகை பிறந்தது
அவனது
உதட்டில்…
நீ “நடுவண்” என்று
கூற கூட
ஒரு நிலை சார்ந்து
நிற்கும் அவலம்
அதுவென்றான்…
நடுவென்பது நிலை
சார்ந்ததானது
எப்பொழுது என்றேண்ணி
திகைத்தேன்…
புன்னகை பூத்த
உதடுகளில்
பெருஞ்சிரிப்பு ஒன்று
இப்பொழுது…
நிலை இல்லாமல்
நிற்க நீ
என்ன “அருவமா”
என்றான்….
கருப்புச் சட்டைக்காரன்
ஏன் கடவுளை
துணைக்கு அழைக்கிறான்..
சற்றே குழம்பினேன்
நான்…
என் மனநிலை
உணர்ந்து கொண்டான்
உடனே…
உயிர் நண்பனல்லவா அவன்…
பெருஞ்சிரிப்பு சற்றே
மாறியது…
சிந்தனை மீள்ளுறு
கொண்டது…
கடவுள் இல்லை
என்பது நடுநிலை
இல்லை
நிலை சார்ந்த
கருத்து…..
“நிலை” சார்ந்ததால்
அக்கருத்து கூட
“நடுநிலை” எனக்
கொள்ளலாம் என்றான்
கவனமாக….
பதில் கேட்டு
வந்த
நபர் தவறோ…
என் மனமும்
பாதமும்
சற்றே பின்வாங்கியது…
தியானநிலை போல்
நிதானித்து
அமர்ந்தான் என்னெதிரில்…
சிரிப்பும் சிந்தனையும்
மறைந்து
நிலையில்லா நிலையுடன்
அவன் முகம்…
அறிவூட்டலுக்குத் தயாரானான்
அவன் …
அறிவுப்பசியுடன் சற்றே
களைத்த நான்
அவன் முன்னால்
மாணவனாய் அமர்ந்தேன்…
நிலை என்பது
சூழ்நிலை சார்ந்தது…
மனிதனின் செயலில்
வடிவாம் நீ சொல்வது…
உலக விதி
கூட சிலநேரம்
உருமாறும்…
நிறை கொண்ட
நிலை கொள்ள
ஒரு உபாயம் உள்ளது…
“நடுநிலை” என்பது
கடந்த உண்மை அது
“நிறைநிலை” என்பது….
சரி தவறு கண்டு
இயற்கை விதி கொண்டு
மனிதனின் நிலை சொல்தல்
“நடுநிலை”…
விதி தாண்டி
எல்லைகள் ஏதுமின்றி
“அன்பை” மட்டுமே
அடிக்கொள்ளும் நிலைதான்
“நிறைநிலை”…
“நடுநிலை” கொண்டு
நல்லவன் உருக்கொள்வது
இனிமை மட்டுமே…
“நிறைநிலை” கொண்டு
அன்பாய் நிலைத்தல்
மேன்மையிலும் மேன்மை என்றான்…
உபதேசம் அருமை…
நன்றிகள் பற்பல…
“நிறைநிலை” என்பதை
வாழ்வியல் நிலைகொள்ள
வழிமுறை தேடும்
பயணம் தொடங்கியது…
திருமுகம் திரும்பி நிற்கும்
சிலரின்
வலிமுகமும் எதிர் நிற்கும்
முகச்சாடை மூன்றாகும்
ஆண் பெண் திருநங்கை
மூன்றின் நிறைவும் வேறாகும்
வண்ணம் வாழ்வின் வெற்றி
சில முகத்தில்
கவலையின் அனைக்கட்டு
நெற்றிக்கண் கொண்டு உதித்த
ரௌத்திரம் சிலநேரம்
உனைத் தொங்கவும் வைக்கும்
கண்மையின் கோலம் அழகு
அழுதால்
கண்ணருவியின் வழியும் கருப்பு
வண்ணமயமான வாழ்வென்றாலும் இங்கே
பன்முகம்
தேவைதான் பலநினைவும் தேங்கும்தான்.
மாதத்தின் முதல்நாள் வரவுசெலவு வடித்தால்
அவன் குடிமகன்
மாதத்தின் இறுதிநாள் வரவுசெலவு வடித்தால்
அவர் அமைச்சர்
முதலும் இறுதியும்
முற்றும் துறந்த மனிதனுக்கு ஒன்றுதான்
வரி செலுத்த பல வழியுண்டு
வரி தவிர்க்கவும் சில நிலையுண்டு
வரி தெரியாமல்
மரபொத்து வாழ்வான் அவன்
மரபுகாத்து மண்சேர்வான் அந்த மாமனிதன்
முற்றும் துறந்த அவன் கோவணத்துடன்
உண்மை பலநேரங்களில்
உடைகளினுள் மறைவதுதான் வேடிக்கை
உணவுகண்டு உயிர்சேர்த்து உலகனைப்பான்
அந்தக் கர்மயோகி
உணவுண்டு உயிருடைத்து சீர்கெடுப்பான்
பல மர்மயோகி
காலத்தின் கையில் மரபுண்டு
அந்தக் காரணத்தின்
நிலையில் பல தெளிவுண்டு
மரபுகாப்பான் நிலைத்திருப்பான் என்றும் பிழைத்திருப்பான்….
என்னைச் சுற்றி
நிகழ்வுகள் நிஜங்களாய்
நானும் காரணம்
காரணமுமில்லை காரியமுமில்லை
காரணத்தின் கர்த்தா
அமைதியின் நிலையில்
காரியக்காரன் கவனமாய்
காலத்தின் கையிலவன்
காற்றும் சுற்றும்
நெருப்பும் சுற்றும்
நிலைகளில் நிலையில்லை
நினைவுகள் நிதமில்லை
நேர்கோடு ஓவியமே
பார்ப்பவன் வளைந்தால்
ஒருபுள்ளியும் கோலமாகும்
முழுப்படமும் தெரிந்தால்
அமைதியின் வடிவம்
மனதின் குமறல்
காலம் ஓடுகிறது
சாட்சியாய் நிற்பவபர்
மையல் கனவுதான்
மையமும் அதுதான்
வெற்றி நழுவலாம்
விடைகாண விழையலாம்
அடிவானம் சிவக்கும்பொழுது
சூரியன் உதயமுமாகலாம் ….
சினம் தவிர்த்து சிந்தை செலுத்தி
சீர்மதி சேர்த்து சிறப்பெய்தி சென்றோம்
சேர்சென்ற மிருகமாம் வன்மம் கொண்டமனிதனாய்
வரும்பொழுது வழிசெல்வோம் வீறுகொண்டு வேரறுப்போம்…
#கவிதை
கோபப்படுற சாதாரண மனுசனை விட கோபத்த மனசுல அடக்கி வன்மம் வளர்த்து வாய்ப்பு கிடைக்கும் பொது சீறுறவங்க ரொம்ப Dangerous Fellows… சூதானமா இருகனுமப்பு…..