மனிதர்கள் பலவிதம்

சற்று தாமதமான பதிவு. கடந்த சனி ஞாயிறு கிழமைகளில் தீபாவளி ஒட்டி பொருட்கள் வாங்க 3-4 கடைகளுக்குச் சென்றேன். அங்கே நடந்த சம்பவங்களும் உரையாடல்களும் உங்கள் வாசிப்புக்கு…

மனிதர்கள் பலவிதம் – காட்சி 1:

நடுத்தர அளவுள்ள ஒரு துணிக்கடை.
17-18 வயதுள்ள ஒரு இளம் பெண் சுமார் 7-8 சுடிதார்களை ஒன்றாக trail roomக்கு எடுத்துச் சென்றார். என் மனைவி ஒரு சுடிதார் trail பார்க்க காத்துக் கொண்டிருந்தார். இளம் பெண் புதிய சுடிதார் ஒன்றை அணிந்தபடி, மீதி 6-7 சுடிதார்களை கையில் சுமந்தபடி வெளிய வந்தார். காத்திருந்த என் மனைவி trail roomக்கு உள் சென்றார். திரும்பி வந்த இளம் பெண் (மீண்டும் கைகளில் புதிதாக 2-3 சுடிதார்கள்) trail room கதவை தட்ட ஆரம்பித்தார்.

“ரெண்டு நிமிஷம் மா… ஒரு சுடிதார் trail பாக்கணும்…இப்போ வந்துருவாங்க…”
ஒரு முழியுடன், இளம் பெண் கதவருகே நின்றாள்.

ஒரு நிமிடம் தாண்டியது …..
“எப்போ வருவாங்க ….” மீண்டும் இளம் பெண்…
ஒரு சிறு புன்னகையுடன் நான் பதில் எதுவும் சொல்லவில்லை…

மீண்டும் ஒரு நிமிடம் தாண்டியது …..
“எப்போ வருவாங்க … நான் ரொம்ப நேரமா wait பண்றேன்”….மீண்டும் இளம் பெண்…
“ஒரு சுடிதார் trail மட்டும் தான் பாக்கணும்…இப்போ வந்துருவாங்க…”

மீண்டும் ஒரு நிமிடம் தாண்டியது …..
” நான் முதல வந்தேன் … என் டிரஸ் உள்ள இருக்கு …நீங்க என்கிட்ட கேட்காம எப்படி உள்ள போகலாம்”….
கொஞ்சம் கோபம் வந்தது…. “இது private இடம் இல்லாமா… public இடம் …. நீ இடம் எல்லாம் புடிக்க முடியாது… கொஞ்சம் wait பண்ணு …இல்ல வேற trail roomக்கு போ…”
“அம்மா இங்க வா …பாரு rooma பிடிச்சிகிட்டு விட மாட்டைக்கிறாங்க…”
“என்ன ஆச்சும்மா …” அம்மா அருகில் வந்தார்…
சுருக்கமாக நான் நடந்ததைச் சொன்னேன்…
“சின்ன புள்ள… கொஞ்சம் விட்டு கொடுங்க …”

பதில் சொல்வதற்குள் என் மனைவி trail roomக்கு வெளியே வந்தார்….
நான் பதில் எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன் ….

மனிதர்கள் பலவிதம் – காட்சி 2:

மிகப் பெரிய ஜவுளிக் கடையின் ஏழாவது மாடி உணவகம்.

மதியச் சாப்பாட்டு நேரம். காலையில் இருந்து துணி எடுத்தக் களைப்பில் உணவகத்தில் சரியான கூட்டம்.
நீண்ட வரிசையில் நின்று சாப்பாடு வாங்கிய பின், சற்று நேரம் தாமதித்து 4 பேர் அமரும் மேசையை பிடித்து அமர்ந்தோம்.
அருகே சுமார் 8-10 பேர் அமரும் மேசை. ஒரு பெரிய குடும்பம் இடம் பிடித்து இருந்தது.
பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் ஒரு நிண்ட பட்டியலுடன் இருவர் உணவு வாங்கச் சென்றனர். அவர்கள் திரும்பி வார எப்படியும் 10-15 நிமிடங்களாவது ஆகும் என்பது உறுதி.
நாங்கள் பாதி சாப்பாடு முடித்திருந்தோம்.
ஒரு வயதான தம்பதி தாங்கள் வாங்கிய உணவுடன் எங்களுக்கு அருகில் இருந்த இரண்டு பேர் அமரும் மேசையின் அருகில் வந்தனர். ஒரு இருக்கை மட்டுமே இருந்தது.

அந்த வயதானவர் தன் மனைவியை இருக்கையில் அமர வைத்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். இருக்கை எதுவும் காலி இல்லை. அருகே இருந்த பெரிய குடும்பத்தில் உள்ள ஒரு பெண்மணியிடம் சென்றார்…

“அம்மா அந்த குழந்தைய மடியில வச்சுகிட்டு ஒரு சேர் தர முடியுமா…”
“இல்லங்க சாப்பாடு வாங்க போயிட்டாங்க….இப்போ வந்துருவாங்க…”
“நாங்க சாப்பாடு வாங்கிட்டோம்…சீக்கிரம் சாப்ட்டுருவோம்…”
“அந்த பையன் மடில உக்கார மாட்டாங்க….சாப்பாடு வேற வந்துரும் …வேற பாருங்க…”
“கொஞ்சம் சேர் கொடுங்க ….உங்களுக்கு சாப்பாடு வந்துருச்சுனா நான் சேர் திரும்பிக் கொடுத்துரேன்…”
“இல்லங்க…உங்கள எப்படி எழுந்தரிக்கச் சொல்ல முடியும் …”

நான் எழுந்து என் சேரை கொடுத்துவிட்டு…. சற்று தள்ளி புதுத் துணிப் பைகளுடன் காத்திருக்கத் தொடங்கினேன்….

அந்தத் தம்பதி உணவு முடித்து கை கழுவும் வரை …பெரிய குடும்பம் உணவுக்காக காத்துக் கொண்டிருந்தது….

மனிதர்கள் பலவிதம் – காட்சி 3:

மற்றும் ஒரு துணிக்கடை.
வாங்க வேண்டிய அனைத்தும் வாங்கிய பின் பில் போடும் இடத்தில் நாங்கள்.
மற்ற கடைகளைப் போல் இல்லாமல், மூன்று மாடிகளுக்கும் சேர்த்து மொத்தமாக பொருட்களை பில் போட்டுக் கொண்டிருந்தனர்.
எங்கள் பொருட்களுக்காண தொகை சொல்லப் பட்டது. கடன் அட்டையில் பணம் செலுத்தினோம்.
வாங்கிய பொருட்களைச் சரி பார்த்தோம் ….
ஒரு பொருள் மாறி இருந்தது…

மீண்டும் பில் போடுபவரிடம் சென்றோம்.
“பொருள் மாறி வந்துருக்கு…”
“sorry sir …. return போட்டு எடுத்துக்குரேன்…”
Return பில் போட ஆரம்பித்தார்.
“sir… 30 ரூபா அதிகமா இருக்கு …வேற ஏதாவது வாங்கிக்கோங்க…”
“புரியல ….திரும்ப சொல்லுங்க…”
“உங்களுக்கு மாத்தி கொடுத்த item விலை, உங்க ஒரிஜினல் item மோட விலையை விட 30 ரூபா அதிகம்…tally ஆகாது …நீங்க return பில்லுக்கு தகுந்த மாதிரி ஒரு 30 ரூபாய்க்கு வேற ஏதாவது பொருள் எடுத்துட்டு வாங்க…”
“எனக்கு வேற எதுவும் வேண்டாம்…என் பில்ல ஒழுங்கா போடுங்க”
“sir …பண்ண முடியாது sir …system சப்போர்ட் பண்ணாது…”
“நான் எங்க உங்க தப்புக்கு 30 ரூபா அதிகமா செலவு பண்ணனும்…முடியாதுங்க…”
என்னை ஒரு இரண்டு நிமிடம் முறைத்தார்… நான் மவுனமாக நின்றிருந்தேன்…
“எம்மா 30 ரூபா சோப்பு ஒன்னு கொடு…”
30 ரூபா சோப்பு என் பில்லில் சேர்க்கப் பட்டது.
மீண்டும் தனியாக 30 ரூபா return பில் போடப் பட்டு …கணக்கு நேர் செய்யப்பட்டது…

அமைதியாக எங்கள் பொருளுடன் நாங்கள் கடையை விட்டு வெளியேறினோம்…

மனிதர்கள் பலவிதம் !!!
பல்வேறு நிலைப்பாடு …
பல்வேறு சூழ்நிலைகள் !!
“மனிதம்” பல நேரங்களில் “??” மட்டுமே ….

உங்கள் கருத்துகளைப் பின்னுட்டத்தில் தெரிவித்தால் மகிழ்வேன்… அன்புக்கு நன்றி….

3 thoughts on “மனிதர்கள் பலவிதம்”

 1. I agree with you
  I also asking this question,in so many places from my past to over present
  “Why should i pay for your mistake !”

  Honest is the greatest thing, sometimes, we ddnt expect from those cheap people ..

 2. 1. Trial room அட்டகாசம் ரொம்பவே அதிகம் . சில கடைகள்ல, ஒருத்தருக்கு ஒரு முறை, 3 டிரஸ் வரைக்கும் தான் trial அனுமதி உண்டு. அவங்களோட கடைக்கு வர்ற ஆட்கள் trial room வெளியே, கை நிறைய டிரஸ்களை வச்சிக்கிட்டு ஒவ்வொன்னா ட்ரை பண்ண குடுப்பாங்க. நான் சண்டையே போட்டிருக்கேன்.
  2. 2வது காட்சி பற்றி என்ன சொல்ல! சிலர் அப்படித்தான் 🙁
  3. சில்லறை இல்லனு மிட்டாயை கையில திணிக்குறதும் இந்த வகை தான் , என்னை பொருத்தவரை. 6 ரூபாய்க்கு இருமல் மிட்டாய் குடுத்தாங்க மெடிக்கல் ஸ்டோர்ல … எனக்கு இருமலே இல்லையேனு சொன்னேன் . நம்மூர்ல மட்டும்தான் இப்படினு நினைக்குறேன் .

 3. Excellent Ganapathy – REally liked all the three short recollections of people behaviour. People are literally aggressive with no sense of courtesy or respect for elders or people ahead of us. Sometimes leaves us disturbed as to where we are leaving our children. Are others lso teaching inculcating values to the children or tutoring wrong inputs to the children like the mother in the first reference and the mother in the second reference who refused to part with the chair. God save this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *