என் 10 செகண்ட் கதைகள்

ஆனந்த விகடன் 10 செகண்ட் கதைகளுக்கு அனுப்பினேன்… எந்த பதிலும் இல்லை… அதனால் என் வலைப்பூவில்… உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தால் மகிழ்வேன் …

பூக்கள் பூத்தன 
 
“அளவு சரியா இருக்கு, ஆனா பூக்கட்டு கொஞ்சம் தொய்வா இருக்கு, நாளக்கி நெருக்கி கட்டு” என்றபடி வியாபாரி கட்டுக் கூலிப் பணத்தை  பூக்காரியிடம் கொடுத்தான். ஒரு மாதமாக பூ கேட்டப் பூக்காரியின் 3 மகள்களும், தலையில் பூவுடன் மகிழ்ச்சியாக விளையாண்டு கொண்டிருந்தனர்.
என் சோகம் 
 
திக்குவாய் தந்தை கேரக்டரில் நடித்து சிறந்த நடிகருக்கான நேஷனல் அவார்ட் வாங்கிய உதயன், விருது வாங்கியவுடன் தன் மகனை மொபைலில் அழைத்தார்…”அப்..ப்….ப்பா….. க..ங்க்…ரட்…ட்ஸ்”.
வருமானம்  
 
“எந்த மூஞ்சில முளிச்சனோ வருமானம் சரியில்ல…” என்றபடி அர்ச்சனை தட்டின் பணந்தை பையில் வைத்தார் குருக்கள். உள்ள கருவறையில் சுவாமி சிரித்துக் கொண்டிருந்தார். 
சோறு
3 மணி கொடூர வெயில். பழைய சோற்றை வெங்காயம், மாங்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிட ஆரம்பித்தாள் சாலையோரத்தில் வாழும் நாகினி. சிக்னலில் நின்ற பென்ஸ் நகர்ந்தது. காரில் இருந்து நாவில் எச்சி ஊர சோற்றை பார்த்துக் கொண்டிருந்தாள், ஆறு மாதமாக ஜீரோ டையட்டால் சோறு சாப்பிடாத நடிகை நாகினி. 

13 thoughts on “என் 10 செகண்ட் கதைகள்”

 1. 10 செகண்ட் கதைகள் அருமை. எப்போது அனுப்பினீர்கள் விகடனில் வெளியாக தாமத மாகலாம். விகானில் இடம்பெற வாழ்த்துகள்

  1. ஆவியில் இருந்து பதில் வரும்வரை காத்திருந்து இருக்கலாம் ,இனி பிரசுரம் ஆகாதே .கணபதி ஜி 🙂

 2. Ganapathi…..
  நீங்கள் கதை எழுதுகிறீர்கள். . . . அந்த வகையில் பாராட்டுக்கள்..,
  நீங்கள் பயன்படுத்தும் யுக்திதான் பழசு…
  ஆனந்தவிகடனில் வெளிவருவதே அங்கீகாரமாகிவிடாது. . .
  நிறைய படிக்கவேண்டும்… சுஜாதா…மேலாண்மை பொன்னுச்சாமி… ஜெயகாந்தனை… இன்னும் நிறை
  படியுங்கள்…. உங்களின் திறமை மீது சந்தேகம் இல்லை…
  வாழ்த்துக்கள்….

 3. பூக்கள் பூத்தன :

  எளிமையாக ஏழ்மையை சொன்னது ரசிக்கும் படி அமைந்தது.

  வாழ்த்துக்கள்

 4. என் சோகம்

  சுவைத்தது
  ரசித்தேன்
  பகிர்ந்தேன், உங்கள் பெயரில்.
  வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *