சென்னையில் அரிசி திருவிழா

பிரிட்டிஷ் அரசாங்கம் நம் மாட்டையும் விவசாயத்தையும் எப்படி மாற்றினார்கள் என்பது பற்றிய ஒரு நீண்ட விளக்கம் whatsapp மற்றும் FBயில் பரவிக் கொண்டிருப்பதை நீங்களும் வாசித்திருக்கலாம். நாம் நம் பாரம்பரிய விவசாயத்தையும் விவசாய முறைகளையும் விட்டு எவ்வளவு நீண்ட தூரம் வந்துவிட்டோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக சென்னை அரிசி திருவிழா அமைந்திருந்தது.

நெல_ திருவிழா_பாரம்பரிய_அரசி

சென்ற சனிக்கிழமை ( 26 செப் 2015) அன்று சென்னை தக்கர் பாபா பள்ளியில், நண்பர் திலக் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய அரிசி திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. “பாரம்பரிய அரிசி” என்கிற்ற ஒற்றை குறிக்கோளை முழுமையாகக் கொண்டு விழா கச்சிதமான அளவில் திட்டமிடப்பட்டிருந்தது. பெரும்பான்மையான மக்களுக்குத் தெரிந்த 5-6 அரிசி வகைகள் விழாவில் இல்லாதது ஆச்சரியம்.

நெல்_திருவிழா_பாரம்பரிய_அரசி_1

நெல்_திருவிழா_பாரம்பரிய_அரசி_2

நெல்_திருவிழா_பாரம்பரிய_அரசி_6

சுமார் 60 வகை பாரம்பரிய நெல் ரகங்களை வரிசைபடுத்தி வைத்திருந்தினர். ஒவ்வொரு அரிசி ரகத்தின் விளையும் வகை, அதன் சிறப்பு, உணவு பயன்பாடு, மருத்துவ குணம் என அருமையான தகவல்களை தொகுத்து அளித்திருந்தனர். விழாவுக்கு வந்த அணைத்து நண்பர்களும் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் மேம்படுத்திக் கொண்டனர் என்பது திண்ணம்.

நெல்_திருவிழா_பாரம்பரிய_அரசி_3 நெல்_திருவிழா_பாரம்பரிய_அரசி_4

அரிசி என்பது மருந்து, பல்வேறு நோய்களுக்கு தீர்வு இந்தப் பாரம்பரிய அரிசிகளில் உள்ளது என்பன போன்ற சான்றுகளுடன் தெரிவிக்கப் பட்ட தகவல்கள் அருமை. யானையை மறைக்கும் அளவுக்கு வளரும் நெற்பயிர், வறண்ட பூமியில் கூட நிறைந்து விளையும் நெற்பயிர், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உகந்த நெற்பயிர், பெரிய மழை வெள்ளத்திலும் பாதிக்கப் படாத நெற்பயிர், குழந்தைகளுக்கு உகந்த சத்துக்களை தரும் நெற்பயிர் என்று பலவிதமான நெற்பயிர்- அரிசி ரகங்களை காட்டி நம்மை நிறை செலுத்தியது இந்த விழா.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்

என்ற அவ்வைப் பாட்டியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
பசுமைப் புரட்சி என்ற பெயரில் அறிமுகப் படுத்தப் பட்ட நெல் ரகங்களால் உண்டான மாற்றங்களும், நெற்பயிரின் உயரம் குறைந்ததால் ஏற்பட பொருளாதார மாற்றங்கள், மாட்டுத்தீவனம் குறைந்தது எனப் பல்வேறு காரணங்களை தொட்டு ஐயா நம்மாழ்வார் செய்த பரப்புரைகளும் நினைவுக்கு வந்தன.

விழாவில் மதியம் பரிமாறப் பட்ட உணவு வகைகளும் அருமை. பாரம்பரிய அரசி ரகத்தில் சமைத்தால் ருசி எவ்வாறு இருக்கும் என்கின்ற கேள்விக்கு விடை அளிக்கத் தக்க உணவு வகைகள்… அருமையான ருசி… வயிறும் மனதும் நிறைந்தது…

சுமார் 1500 நபர்களுக்கு மேல் இந்தத் திருவிழாவில் வந்து மகிழ்ந்திருப்பர் என்பது என் கணக்கு. நண்பர் திலக் அவர்களின் இந்தப் பணி பாராட்டுக்குரியது. இந்த நெல் ரகங்கள் சார்ந்த தகவல்களைக் கொண்டு ஒரு புத்தகம் விரைவில் எழுதுவார் என்பது என் எதிர்பார்ப்பு. திலக் மற்றும் அவருடன் பணியாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்… தொடரட்டும் இந்த அறப்பணி ….

தொடர்புக்கு:
Aswat Eco Organics
No. 80A/1, G.N.Chetty Road,
T.Nagar, Chennai – 600 017.
(Landmark : Diagonally opp. Hotel Rohini International)
Phone : 044 – 28157196
Mobile : 98416 11045
Web : http://ecoorganic.co.in
Email : aswatecoorganics@yahoo.com

3 thoughts on “சென்னையில் அரிசி திருவிழா”

  1. அது என்ன நெற்பயிரின் உயரம் குறைந்ததால் உண்டாகும் பொருளாதார மாற்றங்கள்? அறிய ஆவல்

    1. மாட்டின் உணவு குறையும். அது நம் பாரம்பரிய வாழ்க்கை சுழற்சி முறையை பாதிக்கும். நம்மாழ்வார் அய்யா அவர்களின் புத்தகங்களைப் படித்தால் முழுதும் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *