நீரின்றி அமையா உலகு

“நமக்கு சில செய்திகளின் முக்கியத்துவம் பல நேரங்களில் புரியாமல் போகிறது”.. இந்த வாக்கியத்தை ஒரு பத்திரிக்கை நண்பர் வாயிலாக சில மாதங்களுக்கு முன் கேட்டேன். இந்த வாக்கியத்தில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் சரியான காரண காரியங்களுடன் இது போன்ற அசட்டை நடக்காது என்று மிகப் பெரிய நம்பிக்கையுடன் இருந்தேன். இன்று அந்த நம்பிக்கை சற்றே தளர்ந்தது.

இன்றைய FB, WhatsApp , மற்றும் BLOG இவற்றில் மிக அதிகமாக விவாதிக்கப்படும் செய்தி மற்றும் தகவல் எது என்று சற்றே நுழைந்து பார்த்தேன். பின்வருவன யாவும் தான் அவை:

 1. மோடியின் 7 நாள் வெளிநாட்டு பயணம்
 2. நேதாஜி குறித்த கருத்துக்கள்
 3. ஜெயலலிதா பேரவையில் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து பற்றி கலைஞரிடம் சவால்
 4. ஸ்டாலின் அவர்களின் ‘நமக்கு நாமே’ பாதக, சாதகங்ககள்
 5. கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால், தமிழகத்திற்கு 40 டி.எம்.சி., தண்ணீர் திறக்க முடியாது: சித்தராமையா
 6. விஷ்ணுபிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளின் நெருக்கடியே காரணம்
 7. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தக் கோரி அடுத்தக்கட்ட போராட்டங்கள்
 8. 7அவது சம்பள கமிசன் சார்ந்த எதிர்பார்ப்புகள்
 9. இயற்கை மூலிகை மருந்து தெளித்து சாதனை
 10. ‘வாட்ஸ் ஆப்’ கெடுபிடி உத்தரவுகள் வாபஸ்
 11. தேசிய ஜூடோ போட்டி பழநி மாணவிக்கு தங்கம்
 12. நாளை பக்ரீத் பெருநாள், பிரியாணிச் சாப்பிட அழைப்பு வேண்டல் 

  தினமலர், தினத்தந்தி, தினமணி மற்றும் தி ஹிந்து (தமிழ்) ஆகிய முன்னணி தினசரிகளின் இணைய பக்கங்களை பார்த்தேன். The Hindu மற்றும் Times Of India ஆகிய ஆங்கில நாளிதழிலும் பார்த்தேன்.

  தினமலர் தவிர வேறு எந்த பத்திரிகையிலும் முதன்மையாக இல்லாத செய்தி இதுதான் : “அனைத்து நகரங்களிலும் குடிநீர் வினியோகம் தனியார் மயம்: பணவீக்க அடிப்படையில் கட்டணம் நிர்ணயம்”

செய்திச் சுருக்கம் இதுதான்: தற்போது, நம் நாடு முழுவதும் உள்ள அணைத்து நகரங்களில் மக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யும் பணி, அந்தந்த நகராட்சி, மாநகராட்சிகள் வசம் உள்ளது. இந்த நடைமுறையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொண்டு கட்டணம் வசூலிக்க மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துஉள்ளது.(decided….)  குடிநீர் வினியோகம் செய்யும் பணியில் தனியாரின் பங்களிப்பு ஏற்பட திட்டமிடப்பட்டுள்ளது. (already confirmed….)  பணவீக்கத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யும் திட்டமும் உள்ளது (காசு, பணம், துட்டு, money ).  நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களின் பிரதிநிதிகளுடனும், மாநில அரசு பிரதிநிதிகளுடனும், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள், சமீப காலமாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர் (செய்தி அளவில் இந்த சந்திப்புகள் எங்கும் இருந்ததாக எனக்கு நினைவில்லை). மத்திய அரசின், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வரும் நகரங்கள் மற்றும், ‘அம்ருத்’ திட்டத்தில் வரும் நகரங்களில், இந்த திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகம், அரசு, மக்கள், மக்கள்நலன், அடிப்படை உரிமை, அடிப்படை வசதி, உயிர் வாழும் தகுதி என எந்த நோக்கத்தில் பார்த்தாலும் குடிநீரை அரசு விற்பது அதுவும் தனியார் வசம் குடிநீர் விநியோக உரிமையை கொடுப்பது ஏற்புடையது அல்ல.  குடிநீர் விநியோக நடைமுறையில் உள்ள சிக்கல்களை தீர்க்க பல வழிகள் உள்ளன. அரசு அதிகாரிகள் மற்றும் IAS அந்தஸ்தில் உள்ள பல்வேறு நபர்கள் நிச்சயம் இதற்கான தீர்வை தரமுடியும். ஆனால் எளிய வழிமுறைகளை நாடாமல் குடிநீர் வழங்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைப்பதிலும், குடிநீருக்கு பணவீக்கம் சார்ந்த கட்டணம் வாங்கும் திட்டத்திற்கும் நிச்சயம் மக்களாகிய நாம் உடன்படக் கூடாது.

அரசு இயந்தரத்தில் உள்ள தவறுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய “தனியார்” மயமாக்கல் ஒன்று மட்டும் தான் தீர்வு என்கின்ற இந்த மனநிலை மிகவும் தவறு. “தனியார்” மயமாக்கல் அரசுக்கு மற்றும் மக்களுக்கு உதவும் இடங்களை நாம் ஆதரிக்கலாம்.

நிச்சயமாக “குடிநீர்” விநியோகிக்கும் திட்டத்திற்கு இல்லை…..

“மூன்றாம் உலகப் போர் “நீர்” ஆதாரத்தின் அடிப்படையில் வரும்” என்கிற்ற கோட்பாடு நினைவுக்கு வந்து வாட்டுவதை இந்த சமயத்தில் தவிர்க்க முடியவில்லை…

One thought on “நீரின்றி அமையா உலகு”

 1. திருப்பூரில் இந்த நிலமை இருந்தது. வாடகை சோபா இருபது ரூபா, விலைக்கி வாங்குனா முப்பதே ரூபா கதைதான்

Leave a Reply to HEMALATHA S Cancel reply

Your email address will not be published. Required fields are marked *