ஈழத்தமிழனும் மனிதன் தான்

போர் குற்றம் சார்ந்த மூனாவது அறிக்கையா அல்லது நாலாவதா தெரியவில்லை… ஆனால் பலபேர் எதிர்பார்த்த ஐநா மனித உரிமைகள் அறிக்கை வெளி வந்துவிட்டது [Report of the OHCHR Investigation on Sri Lanka (OISL]. கடந்த இரண்டு நாட்களாக அரசியல் நிகழ்வுகள், தொலைக்காட்சி விவாதங்கள், மற்ற சக நண்பர்களின் கருத்துக்கள் எல்லாவற்றையும் கவனித்து வருகிறேன்.

இந்த விவாதங்களில் உண்மையான நிலவரத்தை மிக விரிவாக மனித உரிமைகள் செயல்பாட்டாளர் “கணநாதன்” அவர்கள் புதிய தலைமுறையின் “நேர்பட பேசு” நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். இவரது அனைத்து கருத்துகளையும் நான் ஏற்கிறேன். கீழே உள்ள சுட்டியில் 30வது நிமிடத்தில் இருந்து அவர் கருத்துகளை நீங்கள் கேட்கலாம்.

TN Assembly resolution on Srilankan war crimes – Nerpada Pesu (16/09/2015)
Youtube Link : https://www.youtube.com/watch?v=–lA0N2rtWM
இந்த OISL அறிக்கை சார்ந்த விவரங்களை பார்க்கும் முன் இரண்டு செய்திகள்:

1) நவநீதம்பிள்ளை அறிக்கை என்ன ஆனது என்பது இன்றுவரை தெரியவில்லை…. ஐநா அது குறித்து பேச விரும்பவில்லை
2) 2011 இல், OISL அறிக்கை போலவே ஐநா ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் சாராம்சமாக சொல்லப் படுவது இதுதான்:

 • The Sri Lankan military used large-scale and widespread shelling causing large numbers of civilian deaths. This constituted persecution of the population of the Vanni.
 • The Tamil Tigers kept hostage 330,000 civilians who were fleeing the shelling and trapped in an ever decreasing area.
 • The Sri Lankan government tried to intimidate and silence the media and other critics of the war using a variety of threats and actions, including the use of white vans to abduct and to make people disappear.
 • The Sri Lankan military shelled on a large scale the three Safe Zones where it had encouraged the civilian population to concentrate. It did this even after saying it would cease using heavy weapons.
 • The Sri Lankan military shelled the UN hub, food distribution lines and Red Cross ships coming to rescue the wounded and their relatives. It did this despite having intelligence as well as notifications by the UN, Red Cross and others.
 • Most of the civilian casualties were caused by Sri Lankan military shelling.
 • The Sri Lankan military systematically shelled hospitals on the frontlines. All hospitals in the Vanni were hit by mortars and artillery, sometimes repeatedly, despite the Sri Lankan military knowing their locations.
 • The Sri Lankan government systematically deprived civilians in the conflict zone of humanitarian aid, in the form of food and medical supplies, adding to their suffering. The government deliberately underestimated the number of civilians in order to deprive them of humanitarian aid.
 • Tens of thousands of civilians were killed between January and May 2009. Many died anonymously in the final days.
 • The Sri Lankan government subjected the civilians who managed to escape the conflict zone to further deprivation and suffering.
 • Screening for Tamil Tigers took place without any transparency or external scrutiny. Some of those separated by the screening were summarily executed whilst women were raped. Others simply disappeared.
 • All IDPs were detained in closed overcrowded camps where they were deprived of their basic rights. The conditions in the camps resulted in many unnecessary deaths.
 • There were interrogations and torture in the camps. Suspected Tamil Tigers were taken to other facilities where they faced further abuse.
 • The Tamil Tigers refused to allow civilians to leave the conflict zone and kept them as hostages. The civilians were sometimes used as human shields.
 • The Tamil Tigers forcibly recruited members during the whole of the civil war but this intensified during the final stages of the war. Some of the recruits were young as 14.
 • The Tamil Tigers forced civilians to dig trenches, risking making them look like combatants.
 • The Tamil Tigers kept on fighting even when it became clear they had lost in order to save the lives of its leaders. This futile prolonging of the conflict resulted in many civilians dying unnecessarily.
 • The Tamil Tigers shot at point blank any civilian trying to leave the conflict zone.
 • The Tamil Tigers fired artillery from near civilians. They also stored military equipment near civilians and civilian structures such as hospitals.
 • The Tamil Tigers carried out suicide attacks against civilians outside the conflict zone even during the final stages of the civil war.
  முழு விவரங்கள் இங்கே காணலாம்:
  https://en.wikipedia.org/wiki/Alleged_war_crimes_during_the_final_stages_of_the_Sri_Lankan_Civil_War

2015 OISL அறிக்கை என்னைப் பொறுத்த வரையில் 2011 அறிக்கையின் மறு பதிப்பு போலவே உள்ளது. ஒரு மிகப் பெரிய மாறுதல் இலங்கையில் இப்பொழுது உள்ள அரசு சற்றே ஐநா அமைப்பினர்க்கு உதவுவது போல் தெரிகிறது. OISL அறிக்கை நடந்தது போர் குற்றம், மனித உரிமைகள் மீறல் என்கிற்ற அளவில் தான் நிற்கிறதே தவிர “இன அழிப்பு நடவடிக்கை” என்று எந்த இடத்திலும் கூறவில்லை. பல்வேறு செயல்பாட்டாளர்கள் விரும்பிய “சர்வதேச விசாரணையும்” OISL அறிக்கையில் உறுதி செய்யப்படவில்லை, ஒரு கூட்டு விசாரணை அமைப்பு என்கின்ற அளவில் நின்று கொண்டது.

தமிழக சட்ட மன்றத்தில் மீண்டும் ஒரு தீர்மானம்….வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால் நிச்சயமாக இந்தியாவின் மைய அரசு, ஐநா மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எந்த பெரிய அழுத்தமும் தராது என்பது திண்ணம்.

ஏமாற்றமான சூழ்நிலை மட்டுமே மிஞ்சுகிறது…. 2009இல் போர் முடிந்தது என்று கொண்டாலும் … 6 ஆண்டுகள் ஓடிக் கடந்து விட்டது …. அறிக்கைகளும் போரட்டங்களும் விவாதங்களும் நடக்கின்றன …

ஈழத் தமிழனின், அடிப்படை”மனிதம்” சார்ந்த எதிர்பார்ப்புகள் என்னவாகும்….. அரசியல் உரிமை இல்லை…இப்பொழுது அந்த கோரிக்கை தமிழர்களின் முதன்மையும் இல்லை, இலங்கையில் இயல்பாக வாழ வழிகூடக் கடினமாகத்தான் தோன்றுகிறது… எந்த பெரிய மாற்றமும் நடப்பதாக தெரியவில்லை.

நம்பிக்கை ஒன்று தான் வழி ….

2 thoughts on “ஈழத்தமிழனும் மனிதன் தான்”

 1. இலங்கை மக்கள் பிரச்சனையை இலங்கை மக்கள் பார்த்து கொள்வார்கள்.
  ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஈழத்தமிழர் நிலை என்ன?

  ஈழத்தமிழ் அகதிகளில் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதி முகாம் எனும் பெயரில் அடைக்கப்பட்டுள்ளனர். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் எந்த நேரமும் போலீசு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் போலீசாரின் பொய் வழக்குகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
  http://www.vinavu.com/2013/04/30/arrest-qbranch-police/

  1. நண்பா, கருத்துக்கு நன்றி…. “மனிதம்” என்கிற அடிப்படையில் மட்டுமே நான் சிந்திக்கிறேன் … ஐநா மனிதஉரிமைகள் வலைத்தளத்தில் பாருங்கள் … உலகம் முழுக்க எவ்வளவு நிகழ்வுகள் …. தான் ஆடவிட்டாலும் தசை ஆடுகிறது ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *