வாழ்த்துக்கள் மட்டும் போதும்

கடந்த 2-3 நாட்களாக மீண்டும் முகப்புத்தகம் மிக மிக சுறுசுறுப்பாக வழக்கம்போல் தன் கொண்டாட மனநிலையில் இருந்தது. முகப்புத்தகதின் வெற்றியே இதுதான். கொண்டாட்டங்களையும் துக்கமனநிலையும், தன்னிலைபோல் பிறர்நிலை காண மற்றும்  பிறர்நிலை போல் தன்னிலை கொள்ள ஏற்படக்கூடிய உணர்வுகளின் ஒரு கூட்டு இடமாக முகப்புத்தகம் இருப்பதுதான். கடந்த வாரம் வரை அப்துல்கலாம் ஐயா அவர்கள் முகப்புத்தகத்தை ஆட்கொண்டிருந்தார். நாட்டின் துக்க மனநிலையில் கூட நல்ல விதமான செய்திகளை மக்கள் கண்டுகொண்ட நேரமது.

சரி இப்போ சொல்ல வந்த செய்திக்கு வருவோம்.

சுந்தர் பிச்சை

“உலகில் தமிழனுக்கு என்று ஒரு நாடு கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கலாம். ஆனால், உலகில் எந்த மூலையில் இருப்பவரும் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள உதவி செய்திருப்பது ஒரு தமிழன்தான். ஆம், உலகின் பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் சுந்தர் பிச்சை (எ) பி.சுந்தர்ராஜன் ஒரு தமிழன்.” – நன்றி விகடன்

இந்தச் செய்தி உலகத் தமிழர்களை அப்படியே ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றது. ஒரு பக்கம் “தமிழன்” அப்படினு கொண்டாடும் நேரத்தில் வேறு சில ஊடகங்களும் வேற்று மொழி நண்பர்களும் சுந்தர் பிச்சை அவர்களை “இந்தியன்” அப்படின்னு கொண்டாட ஆரம்பித்தனர். ஒரே போட்டி… இது வரை சுந்தர் பிச்சை யாருன்னு தெரியாதவங்க எல்லாம் “தமிழன்” & “இந்தியன்” அப்படின்னு சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சாங்க.

எல்லா துப்பறியும் குழுக்களும் தங்கள் பணியைத் தொடங்கினர்…. சுந்தர் பிச்சையைத் தேடி ஒரு பயணம்…இல்லை இல்லை பல பேரின் பலவகையான பயணம். சென்னைக்காரார், கரக்பூர் ஐ.ஐ.டி, ரகுநாத பிச்சை (தந்தை), நடுத்தரக் குடும்பம், ‘‘கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே சுந்தருக்குப் புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக இருந்தது’’ அவரது ஆசிரியர் சொன்னது, வனவாணி பள்ளின்னு சிலர், PSBB அப்படினு சிலர் ……எங்க இருந்து இவ்வளவு தகவல் சேர்தாங்கன்னு  தெரியல….சும்மா போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கிட்டாங்க… மகிழ்ச்சி வெள்ளம் எல்லா இடத்திலேயும் கரை புரண்டு ஓடியது…

சில மக்கள் அதையும் தாண்டி யோசிக்க ஆரம்பிச்சாங்க… உலகத்தில் உள்ள எல்லா முக்கியமான CEO எல்லாம் இந்தியர்கள் அப்படின்னு புகழ  ஆரம்பிச்சாங்க…

CEO

இதுக்கும் மேல ஒரு படி போய் உலகமே அமெரிக்காவின் கையில் …அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இந்தியர்களின் கையில் என்பது போன்ற தோற்றம் கொடுக்கும் படங்கள் வெளி வர ஆரம்பித்தன… அமெரிக்க வரைபடத்திற்கே இந்தியக் கொடியின் வர்ணத்தை பூசி புலகாங்கிதம் அடைந்து களித்தனர்…. ஒபாமா இதப் பார்த்த என்ன நினைப்பாருனு தெரியல….

CEOs2

இந்த அனைத்து முன்னாள் இந்தியர்களின் (சர்வ நிச்சையமாக அவர்கள் வேறு நாட்டில் இந்நேரம் குடியுரிமை வாங்கியிருப்பர்) உழைப்பும் உயர்வும் அளப்பரியது. வேறு கருத்தில்லை. ஆனால் இவர்களின் வெற்றியை “தமிழன்” என்றோ “இந்தியன்” என்றோ ஒரு வட்டத்தில் அடைத்து நாம் கொண்டாடவேண்டிய காரணம் வலுவாக உள்ளதா என நாம் சிந்திக்கவேண்டும்…

நாம் கொண்டாடிய சுந்தர் பிச்சையின் ட்விட்டர் பதிவைப் பாருங்கள் …

சுந்தர் பிச்சை_Twitter

சுந்தர் பிச்சை சொல்வதில் தவறில்லை… என்கருத்தும் இதேதான் ….

நண்பர்களே, கலாம் ஐயாவிற்கு அஞ்சலி செலுத்தி 2 வாரம் கூட ஆகவில்லை…. கல்வி கற்று அயல் நாடு சென்று பணத்திற்காக அவர் பணிபுரியவில்லை என அவர் தேசப்பற்றை கொண்டாடிய நாம்… சுந்தர் பிச்சை போன்ற முன்னாள் இந்தியர்கள், ஐ.ஐ.டியில் கல்வி கற்று வெளிநாடு சென்று வெற்றியை (??) எட்டும் நேரத்தில் அவர்களையும் அதேதொனியில் கொண்டாட வேண்டுமா என ஒரு கணம் சிந்திக்கலாம்.

சுந்தர் பிச்சைக்கு என் “வாழ்த்துக்கள்” மட்டும்….

2 thoughts on “வாழ்த்துக்கள் மட்டும் போதும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *