உன் எண்ணம்போல் என் வாழ்க்கை

விட்டோந்தியான நாள் மீண்டும் இன்று
வந்தது
உன் நினைவின் கேள்வியாய் நீண்டது

மிகக் கொடூரமான அக்னி
சூரியனின்
பரிசாக பகலில் இயன்றவரை நீண்டது

மாலையின் மையல்பொழுது
சற்றே இதமான காற்றுடன்
இளவேனிற்கால இன்பத்துடன் நீண்டது

இரவின் இனிமையைக் கருத்த
பெருமேகம் கொண்ட வானம்
நல்நீர் பொழிந்து இயல்பில் நீண்டது

மனதைத் திறந்து நீ சொல்லும்
பதிலில்
உண்மை கண்டு இன்புற்ற காலம் உண்டு

 

இன்று நாம் விளையாடியது
ஒரு வார்த்தை விளையாட்டு
மட்டும் தானா… மடியில் கனமோ
தெரியவில்லை
உன் விழியில் பயம் துளிர்த்தது

உண்மை சொல்லும் உன் சொல்
இன்று என் இந்த
நன்மை சொல்லவில்லை

நீண்ட நட்பு நம்முயிர்
வளர்க்கும்
சில நீண்ட நட்பு கணப்பொழுதில்
உயிரெடுக்கும்

தோழனைத் தோள்வரை சுமத்தல் எளிது
தோள் தாண்டும் வளர்ச்சி
வான்முட்டும் மகிழ்ச்சி ஆக
உன்னிலை கொள்ள என்செய்வேன் நான்

விட்டொந்தி நாளின் வினோதமான வாக்கியம்
உன் சொல்லுரைத்தால்
மண்மணக்கும் காலம் போனதே…. மனம்வாடுதே

நினைவு கொண்டவரை பிரிந்து வாழ்தல்
வாழ்கையின் வசமாகலாம்
நினைவை வேரறுத்தல் எவருக்கும் வசமாகுமோ?

உன் எண்ணம் போல் உன் வாழ்க்கை உளதோ
தெரியவில்லை
உன் எண்ணம் போல் என் வாழ்க்கை நினைவுகள்
உனதுதான் உண்மையுரைப்பேன்

கடலின் அடி ஆழத்தை கூடாரம் கொண்ட
இயற்கையின் அதிசயம் கூட
உன் மனதின் கேள்வியின் முன்
வெறும் தூசி தான்….

வாழ்கை என்றும் வாழ்வதற்கே
கேள்வியில்லை உண்மைதான்
நினைவுகளின் தாலாட்டும்
நீங்காத இன்பமும்
ஒற்றைப் பிறவியில் துகித்து களிக்கும்
எண்ணம் கொண்ட இயல்பான மனிதன் நான்

கடற்கரையோரம் விளையாடும் குழந்தையாய்
நான்
நீலக்கடலின் நீளமாய் வாழ்கை….

One thought on “உன் எண்ணம்போல் என் வாழ்க்கை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *