அன்பும் ஒளியாய் – RIP APJ

apj-abdul-kalam

இந்தியாவின் ஆளுமைப் பயன்பாடு மற்றும் ஆளுமையைக் குறியீடாகவும் சமூகக் கட்டமைப்பின் வெற்றியாகவும் கருதும் போக்கு மிக அதிகம். தலைமை மற்றும் தலைவர்கள் சார்ந்த பக்தி எல்லையற்றது. இந்தியர்களின் மனதில் இந்த ஆளுமை சார்ந்த நிலைப்பாடு மிக அதிகமாக அரசியல் தலைவர்களையோ அல்லது ஒரு இயக்கச் செயல்பாட்டாளரையோ உடன் கொண்ட அதித அன்பு மற்றும் நம்பிகையாகவே கடந்த 30-40 ஆண்டுகள் இருந்துள்ளது. தமிழ்நாட்டின் இதே விதமான அதித அன்பும் நம்பிக்கையும் திரையுலக நட்சத்திரங்களுக்கும் வாய்க்கும். எந்தவிதமான இலக்கண கட்டமைப்பையும் பழைய மரபையும் மீறி கடந்த 20 வருட காலமாக இந்தியர்களின் மனதில் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆதர்ச நாயகனாகவும், வெற்றிக் குறியீடாகவும், கனவை விதைத்த  தொலைநோக்கு வித்தகராகவும் அறியப்பட்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாம் அவர்கள்.

APJ ஐயாவின் சில செயல்பாடுகள் குறித்து எனக்குச் சில விமர்சனங்கள் உண்டு என்றாலும், ஐயாவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவன் நான். ஐயா அவர்களின் இழப்பு ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் என்பதில் எள்ளளவேனும் ஐயம் இல்லை.

ஆனால் நண்பர்களே உங்கள் அதித அன்பின் வெளிப்பாட்டால் அவர் ஆற்றிய பணிகளையும் அவர் சாராத செயல்களையும் உற்றுநோக்கி கருத்திடுங்கள். எந்த விதமான சர்ச்சைகளிலும் சிக்காமல் அவர் இருந்ததே ஒரு சர்ச்சைதான் என்று சிலர் கூறும் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

நேற்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் APJ அவர்களுக்கு பல தொலைகாட்சியிலும் ஊடகங்களிலும் தங்கள் அஞ்சலியையும் அன்பையும் தெரிவித்தனர். அவ்வாறு தெரிவித்த கட்சித் தலைவர்களும் அவர்கள் சார்ந்த கட்சியும் தான் இன்று “மகான்” என்று கொண்டாடும் APJ ஐயா அவர்களை இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க மனமில்லாமல் முட்டுக்கட்டை போட்டனர் என்பது வரலாற்று உண்மை.

RIP APJ Abdul Kalam Sir……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *