நூடுல்ஸ் சிக்கல் – கேள்விகள் மட்டும்

noodles-நூடுல்ஸ்

இடியாப்ப சிக்கல் கூட பரவாயில்லை… உண்மையான சிக்கல் இப்போ தான் வெளிவந்துள்ளது….

“இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை கோரி சட்டப் போராட்டம் நடத்தி வென்று காட்டியுள்ளார் ஒரு நேர்மையான அதிகாரி.இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. அவர் பெயர் வி.கே.பாண்டே. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேந்தவர்.அம்மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிவரும் வி.கே.பாண்டே மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்மேகி நூடுல்ஸ். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதிதான் மேகிக்கு பிரச்சினை கிளம்பியது. சில சாம்பிள் பாக்கெட்களை வாங்கி வந்த பாண்டே அதை சோதனை செய்தார். பின்னர் அதை மேல் சோதனைக்கு அனுப்பி வைத்தார். அதனையடுத்து கொல்கத்தா ஆய்வகத்தில் சோதனை செய்ய அது முன்வந்தது. இதற்காக 1000 ரூபாய் கட்டணத்தையும் கட்டியது. கொல்கத்தா ஆய்வகத்திலும் மேகியின் ரகசியம் உடைந்தது. மேலும் இந்த சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் கடுமையானது.” – நன்றி விகடன்

இந்த அதிகாரியின் செயல்பாடு பாராட்டத்தக்கது. ஆனால் இந்த ஒற்றை தடையை மீறி பல விடை தெரியாத கேள்விகள் நம்முன்னுள்ளன.

1) இந்த தடையை நிறுவனம் நீதிமன்றதில் சந்திக்குமா இல்லை ஒரு ஒற்றை மன்னிப்பு, அபராதத்துடன் விடை பெறுமா?
2) இவ்வளவு நாள் நூடுல்ஸ் சாப்பிட்ட மக்களின் கதி என்ன?
3) இந்தத் தவறுகள் சமீபத்தில் நடக்கத் தொடங்கியதா இல்லை முதலில் இருந்தே இப்படித்தான்னா?
4) முதலில் இருந்தே இப்படித்தான் என்றால் அரசோ, அரசு சார்ந்த நிறுவனங்களோ இந்த தவறை கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு வருடங்கள்?
5) ஒரு முறை ஒப்புதல் வாங்கிய பிறகு உணவுப் பொருட்களை தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் முறைகளில் உள்ள தவறுகளை கண்டுபிடிக்க அரசாங்கத்தின் கொள்கை வரைவுரைகள் என்ன?
6) உணவுப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை சார்ந்த அரசாங்கத்தின் கொள்கை வரைவுரைகள் யாரால் “time test” செய்யப்பட்டு மாற்றங்கள் செய்யப்படுகின்றன?
7) மார்ச் 2014 அன்றே கண்டுபிடிக்கப் பட்ட உண்மை மே 2015 வரை வெளிவராமல் இருந்தது சரியா? இந்த காலகட்டத்தில் தடைசெயப்பட்ட நூடுல்ஸ் உண்ட மக்களுக்கு யார் பொறுப்பேற்று பதில் சொல்வார்?
8) விளம்பரத்தில் நடித்த நடிகர்களுக்கு கைது உத்தரவு. நடிகர்கள் விளம்பரத்தில் நடிக்க அரசு கொள்கை ரீதியான அறிவிர்தல்கள் ஏதேனும் செய்யுமா?
9) இது போன்ற வேறு உணவுப் பொருட்கள் ஏதேனும் சந்தையில் உள்ளதென்றால் அதன் மீதான நடவடிக்கை என்ன?

இந்த குழப்பத்தில சில பேரு ஹைக்கூ வேற எழுதி சந்தோசப் படுதாங்க…

“இடியாப்பம்/சேமியாவின்’ வாழ்வு தன்னை ‘‪#‎நூடுல்ஸ்‬’ கவ்வும், மீண்டும் ‘‪#‎இடியாப்பம்‬/சேமியாவே’ வெல்லும்”…

ஒன்னு புரிஞ்சுகோங்க மக்களே, “சேமியா” கூட தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்தான். இது போன்ற பயங்கரம் சேமியாவில் நடப்பதற்கும் வாய்ப்பு இருக்கு. சரியான நஞ்சிலா அரிசியில் செய்யலேனா இடியாப்பம் கூட பல சேட்டை பண்ணலாம்.

மேல நான் கேட்ட கேள்வி எதற்கும் நான் யாரிடமிருந்தும் பதில் எதிர்பார்கவில்லை, பதில் வராது என்கிற உண்மை உங்களுக்கும் என்னக்கும் தெரியும்.

பல உணவு மற்றும் உணவு சார்ந்த தொழில்களில் உள்ள கலப்படங்களையும் விபரீதங்களையும் நாம் படித்து கவனிக்காமல் இல்லை கண்டுகொள்ளமால் நாம் (நான் உட்பட) கடந்து சென்று கொண்டு இருக்கிறோம்.

நம்மாழ்வார் ஐயா சொன்ன வாக்கியத்தை நினைவு படுத்தி செல்கிறேன்…”நாம ரசாயன உரங்கள் இறக்குமதி செய்யும் எந்த நாடுகளுக்கும், நம்முடைய விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது…”…

மரபு சார்ந்த வாழ்வு ஒன்றுதான் தீர்வு…..

மதியிழந்த வாழ்வு
மாற்றம்தான் தீர்வு

மனிதனின் மனம்
என்று மீண்டும்
இயற்கையின் இருப்பிடம்

இல்லாமை வேண்டும்
கனவு மெய்ப்படவேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *