பிறந்த ஊர் பெருமை – ரயில் பயணம்

பிறந்த ஊர் பெருமை

பிறந்த ஊர் பெருமை பேசாதவர்கள் மிகவும் குறைவு. அதுவும் 50 வயது தாண்டியவர்களின் வார்த்தைப் பிரயோகம் இந்த விசயத்தில் அதிகமாக இருக்கும். பிறந்த ஊர் பெருமை பற்றி மற்றவர்கள் பேசக், கேட்க இரண்டு இடங்கள் சிறந்தவை: 1) கோவில் திருவிழா 2) ரயில் பயணம். இவ்ரெண்டில் ரயில் பயணம் சுவாரசியம் மிகுந்தது. முன் பின் தெரியாத சக பயணியிடம் பாசத்துடனும் பரிவுடனும் தங்கள் உள்ளக் கிடக்கையைக் கொட்டுதல் ஒரு கலாச்சார நிகழ்வு போலிருக்கும்.

பிறந்த ஊர் பெருமை
நேற்றைய ரயில் பயணத்திலும் மீண்டும் ஒரு “ஊர் பெருமை” அனுபவம். 8 பேர் உள்ள ரயிலின் உள்பெட்டி….நான், 50களில் உள்ள தம்பதியர்  + 6 பேர் கொண்ட குடும்பம் அமர்ந்திருந்தோம். 6 பேர் குடும்பத்தில் கணவன், மனைவி, 2 பெண் குழந்தைகள், கணவனின் தாய் மற்றும் தந்தை, கணவனின் 70+ வயதுடைய அப்பா பாட்டி….. settling down, குழந்தைகளின் விளையாட்டு, சாப்பாடு என் முதல் ஒருமணி நேரம் கடந்தது. நான் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டு என்னை சுற்றி நடப்பவைகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

பிறந்த ஊர் பெருமை

50களில் உள்ள தம்பதியர் சென்னை வந்து சுமார் 10வருடங்கள் ஆகியது போல் பேசினர். மகனின் IT வேலையில் உள்ள குறைபாடுகள் குறித்துக் கவலைப்பட்டனர். மகனின் திருமணம் தள்ளிப் போவது, மகன் weekendஇல் வீட்டில் இல்லாமல் வெளியே சுற்றுவது, apartmentல் உள்ள இடநெருக்கடி, சுவையிலாத தண்ணீர் என அவர்கள் பேச்சு விரிந்தது. மகுடம் வைத்தார் போல் தந்தை ….”ஆதார் கார்ட கொண்டுபோய் காஸ் கடயில காமினு 2 மாசமா சொல்லிக்கிட்டு இருக்கேன் …இந்தப் பய கொஞ்சமாவது காது குடுத்து கேகுறானா….துட்டு அருமை தெரியல”…என நொந்துகொண்டார் …எனக்கு கொஞ்சம் என்னப் பாத்து எங்கப்பா பேசுற மாதிரி இருந்தது (ஆனா நான் submit பணிட்டேன்)…. நடுத்தரவர்கத்தின் பின்புலத்தில் வந்த அப்பாக்கள் ….முதல் சம்பளமே பெரிய தொகை வாங்கி high-class lifestyle வாழ கனவு காணும் மகன்களுக்கு இடையே நடைபெறும் வார்த்தைப் பிரயோகங்களை நிறைய சந்தித்துள்ள என்னக்கு இந்த தந்தையின் கோபம் புரிந்து கொள்ளத்தக்கதாக இருந்தது.

பெரிய குடும்பத்தில் உணவுண்டு முடித்திருந்தனர். அந்தக் கணவன் இரண்டு குழந்தைகளைத் தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தான். கணவனின் தகப்பன் அடுத்த பெட்டியில் உள்ள தன் படுக்கையை சரி செய்து கொண்டிருந்தார். தாயர் குழந்தைகளை பார்த்து கொண்டிருந்தார். மனைவி மாமியாரிடம் பேசாமல் பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாள் . watter பாட்டில் எங்கே, plate கழுவியாச்சா, இட்லி மிச்சம் இருக்கா என்பன போன்ற உரையாடல்கள். பாட்டி எல்லாத்தையும் சரியாய் எடுத்து வச்சிட்டு பதில் சொல்லிக்கிட்டு  வந்தது….இந்த உரையாடலும் சிறுது நேரத்தில் நின்றது …

பிறந்த ஊர் பெருமை

பாட்டி இப்பொது அருகிலுள்ள தம்பதியினரை பார்த்து ஒரு சிநேகச் சிரிப்பை உதிர்த்தது. உரையாடல் ஆரம்பித்தது …..

“படுக்கலாயம்மா….” – பாட்டி
“இல்ல பாட்டி 10 நிமுசம் ஆகனும்” – பெண் தம்பதி
“உங்களுக்கு சென்னையா?”
“இல்ல பாட்டி …இந்த ஊருதான்…”
“அப்படியா எந்த எடம் ”
“பத்தமடை…..2 தலைமுறையா அங்கதான் இருக்கோம்”
“நாங்கலும் தான் …3-4 தலைமுறையா இந்த ஊருதான்…”
“உங்களக்கு எந்த எடம் பாட்டி”
“சிந்துபூந்துரை….3 வீடு கூட இருக்கு…”
“அப்படியா…வாடகைக்கு விட்டுரிக்கிகளா…”
“2 வீடு விட்டிருக்கோம்…ஒரு வீடு வந்தா போன வேணுமில்லை…நீங்க சென்னைல settle அகிட்டிகலா… ”
“இல்ல பாட்டி…பையனுக்கு வேலை கிடச்சி 8-9 வருஷம் ஆச்சு …போய்ட்டு வந்துட்டு இருக்கோம்..”
“சென்னைல இருந்துர வேண்டியதுதானே…”
“பையனுக்கு கல்யாணம் முடிக்கனும் ….நமக்கு சென்னை சரி வராது….சிக்கிரம் பத்தமடை வந்துருவோம்..”
“நானும் சிந்துபூந்துரை விட்டுல சீவன கடத்துனும்னு பாக்குரேன்…முடியல…நல்ல தண்ணீ குடிக்க முடியல…கோவில் குளம் போக முடியலே…சரி நேரம் ஆச்சு படுங்க….”

My Take away:

1) தாய் தகப்பன் தாண்டி சில நேரங்களில் பாட்டி தாத்தா மாரும் பேரன் பேத்திகளுக்காக சொந்த ஊர் பிரிகின்றனர்….
2) எத்தன train விட்டாலும் ஏன் தட்கல் டிக்கெட் கூட கிடைக்க மாட்டைக்குது…இந்த மாதரி மண்ணை விட்டு பிரிய முடியாத மனிதர்களால்தான்…மனம் மிருதுவானது …மண் சார்ந்தது…
3) பிழைப்பு தேடி சென்னை வந்த 95% பேர் வீடுகளில் இது புதிய நிகழ்வு அல்ல…

One thought on “பிறந்த ஊர் பெருமை – ரயில் பயணம்”

  1. பிறந்த ஊர் பெருமை பேசாதவர்கள் இருக்கவே முடியாது… Completely agreed. Have listened to my parents boasting about their native places since my childhood. அவங்க பேசறதக் கேட்டு கேட்டு I had developed a liking towards Tirunelveli district where I was born and lived till I was four years old.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *