கே.பாலசந்தர் – RIP

என்னை கவர்ந்த சில திரைப்படங்கள், என் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கு வெவ்வேறு பரிமாணங்களை வழங்கியுள்ளது. அந்த வரிசையில் உள்ள திரைப்படங்களில் KB என்று மதிப்புடன் அழைக்கப்படும் கே.பாலசந்தர் அவர்களின் திரைப்படங்கள் அதிகம். அன்னாருக்கு மதிப்பு செய்யும் விதமாக 3 திரைப்படங்களைப் பற்றி என்னுரை இன்று #RIP KB Sir.

கே.பாலசந்தர்
1) சிந்துபைரவி: ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் பற்றிய படம். என்வரையில் JKB & சிந்து நண்பர்கள் தான். நட்பு கனியும் பொழுது காமம் தவறில்லை என்ற JKயின் சிந்தனையின் வெளிப்பாடக இந்த படத்தை 3-4 முறை என் 22 வயதில் பார்த்த பொழுது புரிந்தது. பைரவி மனஓட்டம் என்ன என்பது திருமணத்திற்கு பின் புரிந்தது. சிந்துவை JKB முதன் முறையாக தேடிச் செல்லும் காட்சி கச்சிதம். வீட்டில் மிக்சி சப்தம், வித்வான்களை தேடிச் சென்றால் அவர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பர். “சங்கீதம் பத்தி உங்க கூட பேசலாம்னு வந்தேன்….எனக்கு உங்கள மாதிரி பொழுதுபோக்கு எதுவும் எனக்கு தெரியாது…” அப்படின்னு சொல்லிட்டு JKB சிந்து வீட்டிற்கு போவர். பாரதியார் பாடல்கள் பற்றி பேசும் இடம், மொழி மாற்றம் செய்த பாடல்களை சிந்து பாடும் இடம் ….screenplay excellency…. ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என உணர்த்திய படம்…..ஒருவளை JKBக்கு சங்கிதம் தெரிந்த ஓரு ஆண் நண்பர் இருந்திருந்தால் சிந்து நாடி சென்றிரூப்பாரா என்ற கேள்வி என்னுள் இன்னும் பாக்கியுள்ளது…..

2) புது புது அர்த்தங்கள்: மற்றுமொரு ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் பற்றிய படம். “…அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே….”. மனைவியின் “possesivness”, மாமியாரின் சூழ்ச்சி, எதிர்பாராமல் சந்திக்கும் நண்பியின் ஆத்மார்த்தம்….இவையெல்லாம் தாண்டி என்னை கவர்த்த பாத்திரங்கள் Sowkar & Poornam ஆகியோரின் அந்த வயதான அன்பான பாத்திரங்கள் தான். how long a life can go & how couples needs to love each other…என்பதனை இந்த பாத்திரங்கள் தாண்டி யாரும் சொல்லியிருக்க முடியுமா என்பது சந்தேகம். நல்லநட்பு, பிரிவு அடைவது கூட சில நேரங்களில் நன்மைதான்…Life is something beyond என்பதனை climax காட்சி அருமையாக விளக்கியிருக்கும்….#கே.பாலசந்தர்

3) உன்னால் முடியும் தம்பி: அப்பாவின் அடக்குமுறையில் வளரும் ஒரு சிறுவனின் வாழ்வில், ஒரு வேலைக்கார தாத்தா எவ்வாறு ஒரு சமூகச் சிந்தனை விதையை ஊனமுடியும் என்ற வெளிப்பாடு அருமை. பழமையில் வாழும் சங்கீத வித்வான் தந்தை மற்றும் சமுக பொறுப்புள்ள மகன் இடையே நடைபெறும் போரட்ட கதை களம். மகனை தனிமையில் வித்வான் புகழும் காட்சி, தவறு செய்த தந்தையை உத்திரத்தில் தொங்க செய்யும் மகனின் கற்பனை, கதாநாயகியின் கலப்பு மணம் புரிந்த தந்தை பத்திரிகை வைக்க வரும் இடம், “சமைத்து காட்டுவோம்” பாடல், மகனை தந்தை அடிக்க கை ஓங்கும் பொழுது நாதஸ்வரம் வாசிக்கும் ஊமை வித்வான் என் காட்சி அமைப்புகளின் நினைவு இன்றும் இனிமை … screenplay excellency….#கே.பாலசந்தர்

இந்த 3 படங்களிலும் ஜனகராஜ் கதாபத்திரங்கள் கவனிக்கப்படவேண்டியது….
– சிந்துபைரவி – கஞ்சிரா கஜபதி (ஐயோ தல வெடிச்சிரும் போல இருக்கே….)
– புது புது அர்த்தங்கள் – Romeo violinist ( துண்டு தாண்டி சத்தியமா சொல்றேன் …)
– உன்னால் முடியும் தம்பி – Drunker (கொசு தொல்லை தாங்கலப்பா…வீட்ட இழுத்துட்டு போகப்போறேன்….)

For your thoughts:
1) Do you remember expansion of JKB in சிந்துபைரவி movie?
2) Do you remember the TV brand & Actress Poornam likes in புது புது அர்த்தங்கள் movie?
3) Do you remember the Gemini (father) character name in உன்னால் முடியும் தம்பி movie?

பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும்…. தனக்கென தனிப்பாதை வகுத்து….பயணித்த ஒரு ஒப்பற்ற கலைங்கனுக்கு அஞ்சலி… #RIP KB Sir #கே.பாலசந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *